/indian-express-tamil/media/media_files/2025/09/22/ashwin-video-2025-09-22-17-48-53.jpg)
கிரிக்கெட் வீரர் அஷ்வினுடன் இணைந்து யூடியூப்பில் ஷோ நடத்தி வரும் விக்னேஷ் என்பவர், இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற 40 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கூறியதை தொடர்ந்து அஷ்வினின் அம்மா அவருக்கு போனில் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி இந்த முறை டி20 தொடராக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹங்காக், யூஏ.இ ஓமன் உள்ளிட்ட 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடியது. இதில் லீக் சுற்றுகளின் முதல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் வங்கதேச அணி இலங்கை அணியை வீழ்த்திய நிலையில், 2-வது போட்டியில் நேற்று (செப்டம்பர் 21) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியது. ஏற்கனவே லீக் சுற்றில் நடந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில், சூப்பர் 4 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் வேண்டிக்கொண்டு இருந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அரைசதம் கடந்த பர்ஹான் 58 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில், டூபே 2 விக்கெட்டுகளும், குல்திப், பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 172 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு, 174 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அஷ்வின் தனது யூடியூப் சேனலில் விக்னேஷ் என்பவருடன் இணைந்து விவாதம் நடந்த்தி வந்தார். இதில் விக்னேஷ் பாகிஸ்தான் இந்த போட்டியில் வெற்றி பெற 40 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார். அப்போது ஒரு பெண் இவருக்கு போன் செய்து விக்னேஷ், தானே, அஷ்வினுடன் ஷோ பண்றிங்களா என்று கேட்க இவரும் ஆமாம் என்று கூறியுள்ளார். அப்போது அவர் என்ன தைரியத்தில் நீ பாகிஸ்தான் வெற்றி பெற 40 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது என்று சொன்ன? இந்த போட்டியில பாகிஸ்தான் வெற்றி பெற்றால் நீ அவ்வளவு தான் என்று கூறியுள்ளார். இதை கேட்ட பயந்துபோன அவர், யார் நீங்க என்று கேட்க நான் அஷ்வினின் அம்மா என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு ரிலாக்ஸ் ஆன விக்னேஷ் இப்போதான் கொஞ்சம் ரிலாக்ஷா இருக்கு என்று சொல்ல, நான் சீரியஸாகத்தான் சொல்கிறேன். பாகிஸ்தான் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நீ அவ்வளவு தான் என்று கூறியுள்ளார். இது குறித்து விக்னேஷ் அஷ்வின் யூடியூப் சேனலில் கூறியுள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us