Advertisment

21 மாதங்களுக்கு பின் இந்திய அணியில் வாய்ப்பு... ஆனா அஸ்வின் நிலைமை இப்படி ஆகிடுச்சே!

சமீபத்தில் ஆசியகோப்பை தொடரை வென்ற இந்திய அணி அடுத்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

author-image
WebDesk
New Update
Ashwin1

உள்ளூர் போட்டியில் அஸ்வின்

உலககோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை. அதே சமயம் உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அக்சர் பட்டேல் காயமடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக அஸ்வின், அல்லது வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

Advertisment

இதனிடையே சமீபத்தில் ஆசியகோப்பை தொடரை வென்ற இந்திய அணி அடுத்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், 21 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு அஸ்வின் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இதனால் அவர் எப்படி ஃபர்பாம் செய்யப்போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் 22-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், அஸ்வின் தற்போது தமிழகத்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். வி.ஏ.பி.கிரிக்கெட் தொடரில் எம்.ஆர்.சி.ஏ அணிக்காக விளையாடி வரும் அஸ்வின், யங் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் களமிறங்கினார். இந்த போட்டியில் எம்.ஆர்.சி.ஏ அணி 38 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது.

மீதமுள்ள 12 ஓவர்களுக்காக களமிறங்கிய அஸ்வின், தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 17 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் எடுத்திருந்த அஸ்வின் துரதிஷ்டவசகமாக ரன் அவுட் ஆனார். சுழற்பந்துவீச்சுடன் சேர்த்து பேட்டிங் திறனும் இருப்பதால் தான் அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம் பெற்றுள்ளார்.

இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை மனதில் வைத்து உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அதே சமயம், அடுத்து பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் அஸ்வின் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். முன்னணி வீரர்கள் பலரும் ரஞ்சித்தொடரில் விளையாடவே விரும்பாத நிலையில், அஸ்வின் லோக்கலாக இறங்கி உள்ளூர் தொடரில் உலககோப்பை தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருவது பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ravichandran Ashwin Taminadu Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment