IPL 2021 CSK vs KKR Final Match Update : 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று நடைபெறும் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில், 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களில் ரசிகர்கள் இன்று நடத்தப்பட்ட இந்த தொடரில் 29 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்த வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து இந்த தொடரின் எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் 19-ந் தேதி முதல் ஐக்கிய அரபு அமீகரத்தில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தொடரில் கடந்த அக்டோபர் 8-ந் தேதியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த டெல்லி, சென்னை, பெங்களூரு கொல்கத்தா ஆகிய அணிகள் ப்ளே அப் சுற்றுக்கு முன்னேறியது.
இதனைத் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி நடைபெற்ற முதல் குவாலிஃபையர் போட்டியில் டெல்லி சென்னை அணிகள் மோதியது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலையில், முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணையித்த 173 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 2 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து எலிமினேட்டர் முதல் சுற்றில் பெங்களூருவை சாய்த் கொல்கத்தா அணி எலிமினேட்டர் 2-வது சுற்றில் கடைசி கட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 2 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள கொல்கத்தா அணி 2 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதனால் தற்போது 3-வது முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் கொல்கத்தா அணி களமிற்ஙகவுள்ளது.
சென்னை அணியை பொறுத்தவரை இதற்கு முன்பு 8 முறை இறுதிப்போட்டிக்கு சென்று 3 முறை கோப்பை வென்றுள்ளது. இதில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் மட்டும் சென்னை அணி 7-வது இடம்பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தோனி – வருண் சக்ரவர்த்தி
சென்னை அணி கடைசி 3 லீக் போட்டிகளிலும் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில், குவாலிஃபையர் 1 சுற்றில் கடைசிகட்த்தில் கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி வெற்றிபெய வைத்தார். அந்த போட்டியில் தோனி 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசியது உலகளவில் பெரும் பிரபலமாக பேசப்பட்டது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் தோனியின் ஃபார்ம் தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி தோனிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
2020 ஐபிஎல் தொடரில் தோனி நான்கு முறை வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இன்றைய போட்டியிலும் அதே நிலை தொடருமா அல்லது தோனி தனது கடந்து ஆட்டத்தின் ஃபார்மை தொடர்ந்து அதிரடியான விளையாடுவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் ஒன்று அல்லது இரண்டு டெத் ஓவர்களில், குறிப்பாக தோனி பேட்டிங்க செய்யும்போது வருண் சக்ரவர்த்தியை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி – சுனில் நரேன்
கொல்கத்தா அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களின் ஒருவரான சுனில் நரேன் சென்னை அணிக்கு எதிரான எப்போதுமே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதில் குறிப்பாக சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி நெருக்கடி கொடுத்துள்ளார். கடந்த சீசன்களில் நரைன் பந்துவீச்சில் பெரும்அச்சுறுத்தலை சந்தித்த கேப்டன் தோனி இதுரை நரைன் வீசிய 63 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் தோனிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
ருத்துராஜ் கெய்க்வாட் – லூக்கி பெர்குசன்
நடப்புஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி வரும் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2021 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். 15 போட்டிகளில் 603 ரன்களை சராசரியாக 46. 38. டெல்லிக்கு எதிரான குவாலிபையர் 1 போட்டியில் 50 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். மேலும் ஏற்கனவே கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் வீக் போட்டியில் 42 பந்துகளில் 64 ரன்களும், 2வது லீக் போட்டியில் 28 பந்தகளில் 40 ரன்களும் குவித்தார்.
இந்த சீசனில் கொல்கத்தா அணியிக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ள ருத்துராஜ் பவுன்சர் பந்துகளுக்கு எதிராக கொஞ்சம் திணறியுள்ளார். இதனால் கொல்கத்தா அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் லூக்கி பெர்குசன் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் ருத்துராஜ்க்கு எதிராக பவுன்சர் ஆயுதத்தை எடுக்க அதிக வாய்ப்புள்ளது. அணிக்கு தேவையான போது விக்கெட் எடுப்பதில் வல்லவரான பெர்குசன் தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நரேன் – அம்பத்தி ராயுடு
கொல்கத்தா அணியின் நட்சத்தி சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் சென்னை அணிக்கு எதிரான சிறப்பாக பந்துவீசி வருகிறார். கடந்த போட்டியில் சென்னை அணியின் முக்கிய வீரர்களின் ஒருவராக ராயுடு 10 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது தனதுமாயாஜால சுழந்பந்துவீச்சின் மூலம் அவரை வீழ்த்தினார். இறங்கி வந்து அடிக்க முற்பட்ட ராயுடு பந்தை மிஸ் செய்ததால் பந்து நேராக ஸ்டெம்பை தாக்கியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.