சாத்தியமில்லாத சாதனை... சாதித்ததது சன்ரைசஸ் ஐதராபாத்: ஆகாஷ் சோப்ரா புகழாரம்!

இம்பேக்ட் விதிமுறையால் அணிகளுக்கு தடையற்ற அணிக்கட்டமைப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், உண்மையான மாற்றம் மனநிலையில்தான். திறனில் பெரிய மாற்றம் இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sunrisis Hyderbath

ஜியோ ஹாட்ஸ்டாரில், ஒளிபரப்பாகும் பவர்ப்ளே என்ற சிறப்புத் தொடரில், டாடா ஐபிஎல் நிபுணர்களான ஆகாஷ் சோப்ரா, அனில் கும்ப்ளே, மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் கடந்த சீசனின் முக்கிய மோதல்கள் (clashes) பற்றியும், இந்த லீக் வீரர்களின் வளர்ச்சிக்கு எவ்வாறு உறுதுணையாக இருந்தது என்பது பற்றியும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

Advertisment

இது குறித்து ஜியோஸ்டாருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ஆகாஷ் சோப்ரா 2024 சீசனில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் பற்றி பேசினார்: 2024 சீசன் முழுவதும் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தால் நிரம்பியிருந்தது. இது எதிர்கால டி20 கிரிக்கெட்டின் ஒரு முன்னோட்டமாக அமைந்தது. எல்லோரும் வந்து சிக்ஸர்களை மழையாகப் பொழிந்தனர். 277 ரன்கள் அந்தத் தருணத்தில் அது சாத்தியமே இல்லை என அனைவருக்கும் தோன்றியது. ஆனால்சன்ரைசஸ் அணி அதைச் சாதித்துக் காட்டியது!

அந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் ஆகியோர் அந்த இலக்கை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தொடக்கத்தில் அந்த இலக்கை அடைய முடியாது என நினைத்தாலும், அவர்கள் ஆட்டத்தைத் தொடங்கியபோது ஒவ்வொரு பந்தும் சிக்ஸராக மாறியது! ஒரு கட்டத்தில், இந்த இலக்கை எட்ட முடியாது என நினைத்தவர்கள் கூட போட்டியின் திருப்பத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். இதனால் அந்த போட்டி ஒரு ‘சிக்ஸர் ஃபெஸ்ட்’ ஆகவே மாறியது.

Sunrisis Hyderbath

Advertisment
Advertisements

ஒருவர் ஆட்டமிழந்தாலும், அடுத்த வீரர் வந்து அதே வேகத்தைத் தொடர்ந்தார். இது தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. இந்த பரபரப்பான மோதல் (clash) சில வியப்பூட்டும் தருணங்களையும் உருவாக்கியது. ஆச்சரியமாக, அதிக சிக்ஸர்கள் அடித்த அணி தோல்வியடைந்தது. மும்பை 20 சிக்ஸர்களையும், ஹைதராபாத் 18 சிக்ஸர்களையும் அடித்தது. ஆனாலும், 20 சிக்ஸர்கள் அடித்த மும்பை தோற்றது; 18 சிக்ஸர்கள் அடித்த ஹைதராபாத் வென்றது.

ஆறு மாதங்களுக்கு முன்பு, ஒருநாள் கிரிக்கெட்டில் கூட இப்படியொரு ஸ்கோர் சாதாரணமாகக் கிடைக்கவில்லை. நம்மிடம் உலகக் கோப்பையும் (World Cup) இருந்தது. ஆனால், இந்த அளவிலான வேகம் காணப்படவில்லை. தற்போது, பேட்ஸ்மேன்கள் தங்கள் முழுத் திறமையை வெளிகாட்ட தொடங்கியுள்ளனர். ஆடுகளங்கள் (பீல்டுகள்) நல்ல நிலையில் உள்ளன; இம்பேக்ட் விதிமுறையால் அணிகளுக்கு தடையற்ற அணிக்கட்டமைப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், உண்மையான மாற்றம் மனநிலையில்தான். திறனில் பெரிய மாற்றம் இல்லை, ஆனால் மனநிலையில் ஏற்பட்ட மாறுதல் ஆட்டத்தை முற்றிலும் மாற்றிவிட்டது. இந்த தைரியமான அணுகுமுறையால்தான் டி20 கிரிக்கெட்டின் எதிர்காலம் புதிதாக உருவாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை பற்றி பேசிய சுரேஷ் ரெய்னா, 2008-ல், நாங்கள் கீப்லெர் வெசில்ஸ் (Kepler Wessels) உடன் ஒரு கூட்டம் நடத்தியிருந்தோம். அப்போது மேத்யூ ஹைடன், கை் ஹசி, ஸ்டீபன் பிளமிங் ஆகியோரும் இருந்தனர். கீப்லெர் ஒரு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார் பலர்ப்ளேவில், 40 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் விழுந்தால் போதும், 41 ரன்களில் நிற்கலாம் என்று சொன்னேன். ஆனால், ஹைடன் இல்லை, நாம் நேரடியாகத் தாக்குவோம். 6 ஓவர்களில் 80 ரன்கள் எடுக்கலாம் என்று சொன்னார்.

Sunrisis Hyderbath

அந்த நேரத்தில், ‘6 ஓவர்களில் எப்படி அந்த அளவுக்கு ரன்கள் எடுக்க முடியும்?’ என்பதே கேள்வியாக இருந்தது. ஆனால், மெதுவாக அணுகுமுறை மாறியது, நம்பிக்கை வளர்ந்தது, வீரர்களின் தன்னம்பிக்கை அதிகரித்தது. இன்று, டாடா ஐபிஎல் இளைய வீரர்களுக்கு தன்னம்பிக்கையையும் திறமையையும் வெளிப்படுத்துவதற்கு மிகப்பெரிய மேடையாக மாறியுள்ளது.

ஐபிஎல் 2024-ல் இந்திய அன்கேப்ட் வீரர்களின் செயல்பாடு பற்றி பேசிய அணில் கும்ளே, இந்த சீசனில் சில இந்திய அன்கேப்ட்  வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அஷூடோஷ் சர்மா, நித்திஷ’ ரெட்டி, மயங்க் யாதவ்,ரியான் பராக், அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் சர்வதேச நட்சத்திரங்களை மிஞ்சும் அளவுக்கு திறமையைக் காட்டியுள்ளனர். இந்த அன்கேப்ட் வீரர்கள் மேல்நிலை பெறுவதைப் பார்ப்பது, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது என்று கூறியுள்ளார். 

Ipl IPL 2024

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: