2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ் – ஜடேஜா இணைந்தது குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் 14 போட்டிகளில் 10 தோல்வி 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் பெரிய மாற்றம் தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி சில முக்கிய வீரர்களை விடுத்த சென்னை அணி கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் பல இளம் வீரர்களை வாங்கியது. இதில் குறிப்பிடத்தக்க சீனியர் வீரர் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் மற்றும் ஆல்ரவுண்டராக இவரை சென்னை அணி பெரிய விலைக்கு ஏலத்தில் எடுத்தது.
இங்கிலாந்தின் டெஸ்ட் அணியை மீண்டும் ஃபர்முக்கு கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த ஆண்டு (2022) ஐபிஎல் தொடரில் பங்கேற்காத பென் ஸ்டோக்ஸ் நடப்பு ஆண்டில் ஏலத்தில் பங்கேற்ற நிலையில், அவரை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த சீசன்களில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்டோக்ஸ், 6 ஆண்டுகளுக்குப் பிறகு தோனியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
மேலும் உலகின் மற்றொரு சிறந்த ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுடன் முதல் முறையாக விளையாட உள்ளார். ஸ்டோக்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த ஸ்டோக்ஸ் தனது பயிற்சியைத் தொடங்கினார். மேலும் தனது புதிய அணி வீரர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். இதற்கிடையில், சிஎஸ்கே அணி நிர்வாகம் ஜடேஜாவுடன் ஸ்டோக்ஸ் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளது, சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் இருவரை ஒரே அணியில், ஒரே பிரேமில் பார்த்த ரசிகர்களால் தங்களது மகிழ்ச்சியை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர். இதில் ஒரு ரசிகர் "ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் இருப்பது போன்றது" என்று கூறியுள்ளார். மற்றொருவர் ஆர்ஆர்ஆர் படத்தின் ஜோடியான நெருப்பு மற்றும் பனியின் படங்களை பகிர்ந்து ஜடேஜா-ஸ்டோக்ஸ் அதற்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்று கூறியுள்ளார்.
பல்வேறு காரணங்களால் 2022 ஐபிஎல் சீசன் ஜடேஜாவுக்கு மோசமான சீசனாக அமைந்தது. தற்போது அதில் இருந்து மீண்டு ஜடேஜா, சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியதைத் தொடர்ந்து இதுபோன்ற சிறந்த தொடர்பில் இருந்த பிறகு சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட ஆர்வமாக இருப்பார். ஜடேஜா, ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி ஆகியோர் ஐபிஎல் 2023 இல் சிஎஸ்கேயின் மிடில்-ஆர்டர் பலமாக இருப்பார்கள், மேலும் தோனியின் அசத்தியமான கேப்டன்சி சென்னை அணியை 5-வது முறையாக சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/