ஐதராபாத்தில் சிக்ஸர் மழை... ஆரஞ்சு ஆர்மி எழுச்சிக்கு வித்திட்ட அபிஷேக் சர்மா

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்திய அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்திய அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Abishek

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், 246 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.

Advertisment

10 அணிகள் பங்கேற்று வரும் 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் ஐதராபாத் சன் ரைசஸ் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழபிற்கு 245 ரன்கள் எடுத்த்து. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக விளையாடி 82 ரன்கள் எடுத்து அசத்தினார். ஐதராபாத் அணி தரப்பில் ஹெர்ஷெல் பட்டேல் 4 விக்கெட்டுகளும், மலிங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்

இதனையடுத்து 246 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஐதராபாத் அணியிக்கு டிராவிஜ் ஹெட் – அபிஷேக் சர்மா ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்து அசத்தியது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய  அபிஷேக் சர்மா சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்தார். 246 ரன்கள் இலக்கை நோக்கிய போட்டியில் அபிஷேக் மற்றும் டிராவிஸ் ஹெட் முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்தனர்.

55 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா 10 சிக்சர், 14 பவுண்டரியுடன் 141 ரன்கள் குவித்து, ஆட்டமிழந்தார் இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் அபிஷேக் சர்மா, 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் கிறிஸ் கெயில் 171 ரன்கள் எடுத்து முதலிடத்திலும், மெக்குல்லம் 158 ரன்கள் எடுத்து 2-வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.

Advertisment
Advertisements

18.3 ஓவர்களில், ஐதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரா வெற்றியை பெற்றது.

Ipl Cricket

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: