Tamil Nadu International Surf Open 2023 Tamil News: சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜப்பானின் டென்ஷி இவாமி சாம்பியன்
இந்நிலையில், இந்த அலைச்சறுக்கு போட்டியில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற அரைஇறுதிப் போட்டியில் ஸ்வீடன் வீரர் கியான் மார்டின், ஜப்பான் வீரர் ரைஹா ஓனோவுடன் மோதினார். இந்த போட்டியில் ரைஹா ஓனோவை வீழ்த்தி வெற்றி பெற்ற கியான் மார்டின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்த நிலையில், ஆடவர் இறுதிப் போட்டியில் கியான் மார்டினை வீழ்த்திய ஜப்பானின் டென்ஷி இவாமி சாம்பியன் பட்டம் வென்றார்
இதேபோல், மகளிர் பிரிவில் நடைபெற்ற அரைஇறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஜப்பான் வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். முதல் அரைஇறுதிப் போட்டியில் ஷினோ மட்சுடாவும், 2-வது அரைஇறுதிப் போட்டியில் சாரா வகிடாவும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
ஜப்பானின் சாரா வகிடா சாம்பியன்
இந்நிலையில், மகளிர் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜப்பான் வீராங்கனைகள் ஷினோ மட்சுடா, சாரா வக்கிடா மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 13.50 புள்ளிகள் எடுத்து ஷினோ மட்சுடாவை 0.40 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாரா வக்கிடா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை வீரர்கள் பெற உள்ளார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil