மீண்டும் சிக்கிய தனலட்சுமி... ஊக்கமருந்து சோதனையில் 2-வது முறை தோல்வி?

தமிழக வீராங்கனை சேகர். தனலட்சுமி ஊக்கமருந்து சோதனையில் 2-வது முறையாக தோல்வியடைந்து இருப்பதாகவும், அவருக்கு 8 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது

தமிழக வீராங்கனை சேகர். தனலட்சுமி ஊக்கமருந்து சோதனையில் 2-வது முறையாக தோல்வியடைந்து இருப்பதாகவும், அவருக்கு 8 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது

author-image
WebDesk
New Update
Tamil Nadu sprinter Sekar Dhanalakshmi fails dope test for 2nd time Tamil News

தனலட்சுமி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த தேசிய மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் முறையே 11.36 வினாடிகள் மற்றும் 23.53 வினாடிகளில் ஓடி தங்கம் வென்றார்.

திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்த தனலட்சுமி. மாவட்ட, மாநில, தேசிய, அளவிலான தடகள போட்டிகளில் கலந்துகொண்ட இவர் பதக்கங்களையும், கோப்பைகளையும் குவித்துள்ளார். மேலும், இவர், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் கலப்பு 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கு தனலட்சுமி சேகர் தேர்வானார். இருப்பினும், மாற்று வீராங்கனையாக இருந்ததால், போட்டியில் கலந்துக்கொள்ளவில்லை. 

Advertisment

இதன்பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 தடகள போட்டியில், பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தி சாதனை படைத்தார் தனலட்சுமி. இந்நிலையில், மே 2022 இல் உலக தடகளத்தின் தடகள ஒருமைப்பாடு பிரிவு நடத்திய போட்டிக்கு வெளியே சோதனையில் தனலட்சுமிக்கு மெட்டாண்டினோன் இருப்பது கண்டறியப்பட்டது. இது அனபோலிக் ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு எனப்படும் ஒருவகை ஊக்க மருந்து ஆகும். 

இதனால், பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து தனலட்சுமி நீக்கப்பட்டார். இதனிடையே, அவரது மாதிரி துருக்கியின் அன்டால்யாவில் எடுக்கப்பட்டது. அங்கு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பு அவர் மற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் பயிற்சி பெற்றார். அப்போது, தனலட்சுமி ஊக்கமருந்து எடுத்தது நிருபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 

இந்த தடையில் இருந்து மீண்டு வந்த அவர் இந்த ஆண்டு மீண்டும் போட்டிகளில் பங்கேற்றார். அவர் அண்மையில் பஞ்சாபின் சங்ரூரில் நடந்த இந்திய ஓபன் தடகளப் போட்டியில் அவர் மீண்டும் பங்கேற்றார். பின்னர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த தேசிய மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் முறையே 11.36 வினாடிகள் மற்றும் 23.53 வினாடிகளில் ஓடி தங்கம் வென்றார்.

Advertisment
Advertisements

இந்த நிலையில், தமிழக வீராங்கனை சேகர். தனலட்சுமி ஊக்கமருந்து சோதனையில் 2-வது முறையாக தோல்வியடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அவரின் சோதனை மாதிரியில் பாசிட்டிவ் என வந்து இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

Sports

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: