முரளிதரன் மெடிக்கல் ரிப்போர்ட்: டிஸ்சார்ஜ் ஆவதாக அப்பல்லோ அறிக்கை

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து தற்போது முரளிதரன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முத்தையா முரளிதரன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் பல சர்வதேச சாதனைகளை படைத்துள்ள இவர், டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர், ஐபிஎல் கிரக்கெட் தொடரில் சன்ரைசஸ் ஐதராபாத் அணியில் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

சன்ரைசஸ் ஐதராபாத் அணி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான அணி வீரர்களுக்கு முரளிதரன் நேற்று பயிற்சி அளித்தபோது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனைடுத்து உடனாடியாக முரளிதரன் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு இரத்த குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் இன்று மாலை மருத்துவமகையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவனை அறிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் (49) கடந்த ஏப்ரல் 18 (நேற்று) மராடைப்பு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை இதயநோய் சிகச்சை நிபுணர் டாக்டர்.ஜி.செங்கோட்டு வேலுவின் பராமரிப்பில் அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின் இயல்புநிலைக்கு திரும்பியுள்ள முரளிதரன், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news update former cricketer muralitharan medical report

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com