தேசிய விளையாட்டு தினம்: புதுச்சேரியில் 3 நாட்கள் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் நிறைவு!

தேசிய விளையாட்டு தினம் மூன்று நாட்கள் 29, 30 மற்றும் 31ஆம் தேதி ஆகிய தேதிகளில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 12 ஹாக்கி கிளப்புகளிலும் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.

தேசிய விளையாட்டு தினம் மூன்று நாட்கள் 29, 30 மற்றும் 31ஆம் தேதி ஆகிய தேதிகளில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 12 ஹாக்கி கிளப்புகளிலும் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.

author-image
WebDesk
New Update
Sports Cycling

லீ புதுச்சேரி ஹாக்கி சங்கத்தின் சார்பில் இந்திய ஹாக்கி சம்மேளனம் மற்றும் இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதளின் படி தேசிய விளையாட்டு தினம் மூன்று நாட்கள் 29, 30 மற்றும் 31ஆம் தேதி ஆகிய தேதிகளில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 12 ஹாக்கி கிளப்புகளிலும் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.

Advertisment

ஆகஸ்ட் 29ஆம் தேதி மேஜர் தயான்சந்த் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தி உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு அனைத்து கிளப்புகளிலும் நடைபெற்றது. ஆகஸ்ட் 30ஆம் தேதி தென்னிந்திய எழுவர் ஹாக்கி போட்டி, 14 வயதுக்கோருக்கான மாநில ஹாக்கி போட்டி, கருத்தரங்கம், பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆகஸ்ட் 31ஆம் தேதி சன்டேஸ் ஆன் சைக்கிள், நிகழ்ச்சி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் காலை 6.30 மணிக்கு துவங்கியது.

லீ புதுச்சேரி ஹாக்கி சங்கத்தின் செயல் தலைவர் திரு. பழனி வரவேற்புரை வழங்கினார்,  புதுச்சேரி உள்துறை, கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் சிறபுபு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார். பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன், இளைஞர் அணி மாநிலத் தலைவர் வருண், இந்திய ஹாக்கி வீரர் செந்தில்குமமார், லீ புதுச்சேரி ஹாக்கி சங்கத்தின் தலைவர் குமரேசன், செயலாளர் அன்பழகன் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தனர்.

ரோட்டரியன் திரு. சரவணன், ரோட்டரியன் முத்துராஜூலு, ஃபிட் இந்தியா ஒறுங்கிணைப்பாளர் திரு. சிவசெந்தில் ன, லீ புதுச்சேரி ஹாக்கி துணைத்தலைவர் சந்திரசேகர், கிளப் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், வரதராஜன் மூத்த விளையாட்டு வீரர்கள் அரவிந்தன், சரவணன், ஹரிகிருஷ்ணன், கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Tamil Sports Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: