2025-ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நாளை (நவம்பர் 24) சவுதி அரேபியாவில் தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தில் 1000-க்கு அதிகமான வீரர்கள் பெயர் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக, ஏல ஒளிபரப்பாளர்களான ஸ்டார் ஸ்போர்ஸ் மற்றும் ஜியோ சினிமா கிரிக்கெட் வல்லுனர்களை வைத்து ஒத்திகை ஏலத்தை நடத்தியுள்ளனர்.
இந்த ஒத்தரைக ஏலத்தின்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பாாக்கப்படுகிறது. ஏலத்தில், மார்க்யூ வீரர்களின் முதல் செட்டில் வரும், பந்த், இயோன் மோர்கனால் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியால் ரூ33 கோடிக்கு வாங்கப்பட்டார். அதேபோல் சக விக்கெட் கீப்பர் பேட்டர் கே.எல்.ராகுலும் நம்பமுடியாத தொகையான ரூ29.5 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணியால் வாங்கப்பட்டார். இதை அந்த அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி அணியால் தக்கவைக்கப்படமாத நிலையில், அவரது முடிவிற்கு பணம் காரணம் இல்லை என்று சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது ஏலகத்திற்கு வந்துள்ள ரிஷப் பண்ட், ஏலத்தில் மிகப்பெரிய பெயராக இருப்பதால், பெரிய விலைக்கு வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகை (110.5 கோடி) வைத்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து பண்ட்டை அந்த அணிக்கு அதிக விலைக்கு வாங்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் "அவரது விலை ரூ.26 முதல் ரூ.29 கோடி வரை உயரும் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் அவரது இறுதி விலை ரூ. 33 கோடியாக இருந்தது. ரிஷப் ஒரு டாப்-ஆர்டர் இடது கை பேட்ஸ்மேன் மட்டுமல்ல, அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்களில் ஒருவர்.
நவீன கிரிக்கெட்டில் உள்ள வீரர்கள், அவரது கேப்டன் தகுதி மற்றும் பல ஆண்டுகள் விளையாடும் திறன் ஆகியவற்றுடன் இணைந்து, அவர் ஒரு இளம் எம்.எஸ். தோனி, என்ற அடிப்படையில் நீண்ட காலம் அணியில் விளையாடுவார் என்பதால் எனது பார்வையில், பந்த் போன்ற வீரர்கள் விலைமதிப்பற்றவர்கள், ”என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா நடத்திய ஒத்தகை ஏலத்தில் மோர்கன் கூறியுள்ளார்.
மறுபுறம், பெர்த்தில் நடந்து வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிக்ளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலின் பங்குகள் மிக அதிகமாக உள்ளது. ஐபிஎல் தொடரில் ராகுல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் (LSG) கேப்டனாக செயல்பட்ட நிலையில், தற்போது அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில், விராட் கோலிக்குப் பிறகு தொடர்ச்சியை இடத்தை உறுதிப்படுத்த ரிஷப் பந்திற்கு முன்னுரிமை அளிக்க வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலையில், பண்ட்டை ஏலத்தில் எடுத்தால் அவர் நீண்ட காலம் அணியில் விளையாடும் வீரராக இருப்பார். நான் தனிப்பட்ட முறையில் பன்ட்டுக்கு ரூ32.5 கோடி வரை ஏலம் எடுத்தேன், ஆனால் கே.எல் ராகுலுக்கு இவ்வளவு ஏலம் எடுத்திருக்க மாட்டேன். 32 வயதில், ராகுல் அனுபவத்தை வைத்திருக்கிறார். விராட்டின் சகாப்தத்திற்குப் பிந்தைய இன்னிங்ஸை நங்கூரமிடும் திறன் ஒரு உள்ளூர் திறமையாக, அவர் முக்கியமான விக்கெட் கீப்பிங்கை நிரப்புவார். தினேஷ் கார்த்திக் வெளியேறியதால் காலியாக உள்ள அவரது இடத்தில் ராகுல் விளையாட வாய்ப்பு உள்ளது. ஆனால் இறுதி விலை ஏலத்தில் கணிக்க முடியாத தன்மையாக இருக்கிறது என்று ராகுலை வாங்கிய பிறகு ஹெசன் கூறினார்.
முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் ஒத்திகை ஏலத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தற்போதைய ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை ரூ 21 கோடிக்கு வாங்கினார். வெங்கி மைசூரின் விரைவான ஏல உத்திகளில் இருந்து நான் உத்வேகம் பெற்றேன்-ஒரு வீரரை குறிவைக்கும்போது தீர்க்கமாக துடுப்பை உயர்த்துவது. என்னுடைய நியாயம் தெளிவாக இருந்தது: ஷ்ரேயாஸ் ஒரு நிரூபிக்கப்பட்ட வெற்றிகரமான கேப்டன், மேலும் டி20 போன்ற ஆற்றல்மிக்க போட்டிகளில் அவரது தலைமை பண்பு விலைமதிப்பற்றது. ஆனால் அவரை கொல்கத்தா அணியில் வெளியேற்றி இருப்பது, ஸ்ரேயாஸ் தனது நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள தன்னை விடுவிக்குமாறு கேட்டிருக்கலாம். அவரின் மதிப்பீட்டோடு ஒத்துப்போகாத விலை, அவருடைய சந்தை மதிப்பை சோதிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கலாம் என்று பாங்கர் கூறியுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்/ஜியோசினிமா நடத்திய ஒத்திகை ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட மற்ற வீரர்கள்
மிட்செல் ஸ்டார்க்: ரூ 18 கோடி - மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ)
அர்ஷ்தீப் சிங்: ரூ 16.5 கோடி - பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்)
யுஸ்வேந்திர சாஹல்: ரூ 15 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
இஷான் கிஷன்: ரூ 15.5 கோடி - டெல்லி கேபிடல்ஸ் (டிசி)
இந்த ஒத்தகை ஏலத்தில் டெல்லி அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, "இங்கே விவாதிக்கப்பட்ட விலைகள் கொஞ்சம் உயர்த்தப்பட்டவை என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வோம், ஆனால் நான் எடுக்கும் பெயர்கள் அணியின் உத்திக்கு பொருந்தும்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.