உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பிசிசிஐ இரட்டிப்பு பணிச்சுமை அளித்து உத்தரவிட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி வரும் ஜூன் 7-ந் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகும் வகையில் பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ள நிலையில், இந்திய வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த தொடர் மே மாதம் இறுதிவரை நடைபெற உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்த ஓரிரு நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர்கள் உடனடியாக டெஸ்ட் போட்டிக்கு தயாராவது சற்று சவாலான விஷயம் தான். அதேபோல் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இங்கிலாந்து மைதானங்களில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
இதனை கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு ஒரு வார இடைவெளியில் இடைவெளியில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்க உள்ளதால் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் உள்ளிட்ட பலர், ஒவ்வொரு வாரமும் 33 ஓவர்கள் வீச வேண்டும். இந்த பயிற்சிக்காக அவர்களுக்கு டியூக்ஸ் பந்து வழங்கப்படும். இந்த பந்தில் பயிற்சி செய்வது இங்கிலாந்தில் அவர்களின் திறமைகளை மேம்படுத்த பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பந்துவீச்சாளர்கள் சிவப்பு பந்தில் டாப் கியரை அடிக்க அதிக நேரம் இருக்காது. எனவே, அவர்கள் சிவப்பு பந்தைக் கொண்டு பயிற்சியைத் தொடர வேண்டும். ஐபிஎல் போட்டியின் போது அனைத்து திறமையான பந்துவீச்சாளர்களுக்கும் பயிற்சி அளிக்க சிவப்பு டியூக்ஸ் பந்துகள் வழங்கப்பட்டுள்ளன,” என்று ஒரு மூத்த பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவிவத்துள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ அனைத்து ஐபிஎல் உரிமையாளர்களுக்கும் புதிய ஆணையை வழங்கியுள்ளது. இதில், ஐபிஎல் 2023 இன் போது இந்திய கிரிக்கெட் வாரியம் அதன் பந்துவீச்சாளர்களின் பணிச்சுமையை ‘இரட்டிப்பு’ செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. முகமது ஷமி உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் வலையில் வாரத்திற்கு 200 பந்துகளை வீச வேண்டும். இங்கிலாந்தின் சூழ்நிரைக்கு ஏற்ப தயராகும் வகையில், பயிற்சி செய்ய வீரர்களுக்கு டியூக்ஸ் பந்து வழங்கப்படும். இது குறித்து வீரர்கள் தங்கள் நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டியூக்ஸ் பந்து இந்தியாவில் பயன்படுத்தப்படும் எஸ்ஜி பந்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பரிமாணங்கள் வேறுபட்டவை. இந்திய வீரர்களுக்கு வாரத்திற்கு 200 பந்துகளை வீச இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கவும். ஐபிஎல் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் 4 ஓவர்களை மட்டுமே வீசுவதால், இந்திய பந்துவீச்சாளர்கள் சிவப்பு பந்தைக் கொண்டு பெரிய ஓவர்களை வீச பழக வேண்டும்.
200 பந்துகள் தோராயமாக 34 ஓவர்கள் ஆகும், இது டெஸ்ட் கிரிக்கெட்டில் சராசரி அமர்வைக் குறிக்கிறது. இந்த திட்டம் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கானது என்றாலும், சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரும் இந்த உத்தரவைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு பந்துகளும் மிகவும் வித்தியாசமானவை மற்றும் வீரர்கள் தயாராக இருக்க தங்கள் பணிச்சுமையை அதிகரிப்பது முக்கியம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தயாராவதற்கு அவர்களுக்கு ஒரு வாரமே உள்ளது. ஆனால், அவர்கள் உடல்தகுதி பிசியோதரப்பிஸ்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவார்கள், மேலும் அவர்கள் பணிச்சுமை குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி க்கு நேரடியாகப் தெரிவிக்கலாம்”என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிவசுந்தர் தாஸ் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு ஏப்ரல் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியைத் தேர்வு செய்யும். சமீபத்தில் முடிவடைந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்து உடனடியாக இந்திய அணி இங்கிலாந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.