/tamil-ie/media/media_files/uploads/2021/02/india-vs-england-1.jpg)
India Vs England 2nd Test Match Updtate : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் கடந்த 5-ந் தேதி சென்னையில் தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பிப்ரவரி (13) தொடங்கியது.
முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினர். இதில் சுப்மான்கில் ரன் கணக்கை தொடங்காமலே விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பிறகு களமிறங்கிய புஜாரா 21 ரன்களிலும், கேப்டன் கோலி 0 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 86 ரன்களுகளுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் - ரஹானே ஜோடி அணியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டது.
இதில் இந்தியாவில் சரிவர விளையாடவில்லை என கடும் விமர்சனங்களை சந்தித்த துணைக்கேப்டன் ரஹானே, தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுபுறம் தனது ஏதுவான பந்துகளை சிக்சருக்கும் பவுண்ரிக்கும் விரட்டிய ரோகித் சர்மா தனது 7-வது சதத்தை பூர்த்தி செய்தார்.4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 162 ரன்கள் சேர்த்த நிலையில், 161 ரன்கள் சேர்த்த ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவரது ரன்களில் 18 பவுண்டரிகளும் 2 சிக்சரும் அடங்கும். தொடர்ந்து அரைசதம் கடந்த துணைக்கேப்டன் ரஹானே 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அஸ்வின் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்திருந்தது. பண்ட் 33 ரன்களிலும், அக்சர் பட்டேல் 4 ரன்களிலும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து இன்று தொடங்கி 2-வது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த்தால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலி 4 விக்கெட்டுகளும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டுகளும், ஜாக் லீச் 2 விக்கெட்டுகளும், கேப்டன் ரூட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதே நிலைய கடைசி வரை தொடர்ந்தால்,இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 134 ரன்களி்ல் சுருண்டது. சிம்பிளி 16 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 18 ரன்களிலும், கடந்த போட்டியில் இரட்டை சதமடித்த கேப்டன் ஜோ ரூட் 6 ரன்களிலும், ஒல்லி போப் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசிவரை களத்தில் இருந்த பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன் மூலம் 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 25 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக தொடக்க வீரர் சுப்மான் கில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போதுவரை இந்திய அணி 249 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இன்னும் 3 நாட்கள் மீதமுள்ள நிலையில், நாளை 3-வது நாள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கடந்த போட்டியில் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது என கூறப்பட்ட நிலையில், இந்த போட்டியில், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது. இந்த போட்டியில் இன்று ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்து இருந்தது. 3 - வது நாள் ஆட்ட நேர நிதான தொடக்கத்தை கொடுத்த இந்திய அணி ரோகித் சர்மா 25 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அதன் பின் களமிறங்கிய கேப்டன் கோலி, மற்றும் அவரோடு ஜோடி சேர்ந்த ரிஷாப் பந்த் ஆட்டத்தை நிதானத்துடன் நகர்த்திய போது, ரிஷாப் பந்த் இங்கிலாந்து அணியின் ஜாக் லீச் வீசிய பந்தில் ஃபோக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அஜிங்க்யா ரஹானே மற்றும் அக்சார் படேல் சொற்ப ரன்களை எடுத்து அவுட் ஆகினர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரவிச்சந்திர அஸ்வின், மறுமுனையில் விக்கெட் சரிவை மீட்க போராடிக் கொண்டிருந்த கேப்டன் கோலியுடன் இணைந்தார். கோலி மற்றும் அஸ்வின் ஜோடி நேர்த்தியுடன் ஆடி 2வது இன்னிங்ஸில் 202 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்தின் மொயீன் அலி வீசிய பந்தில் கேப்டன் கோலி தனது விக்கெட்டை பறி கொடுத்தார். சிறப்பாக ஆடி இருந்த கேப்டன் கோலி 149 பந்துகளில் 7 பவுண்டரிகளை அடித்து 62 ரன்களை சேர்த்தார். அதன் பின் களமிறங்கிய குல்தீப் யாதவ் 3 ரன்களுடன் அவுட் - ஆகி வெளியேற, அவருக்கு பின் களமிறங்கிய இஷாந்த் சர்மா சிறிது நேரம் தாக்குப் பிடிக்க 7 அடித்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நீண்ட நேரம் தனி ஒருவனாக போராடிய அஸ்வின் இந்த தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இங்கிலாந்தின் ஒல்லி ஸ்டோன் வீசிய பந்தில் அஸ்வின் ஆட்டமிழக்க இந்திய அணியின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. மிகச் சிறப்பாக ஆடிய அஸ்வின் 148 பந்துகளில் 1 சிக்ஸர் 14 பவுண்டரிகளை பறக்க விட்டு 106 எடுத்திருந்தார். இந்த போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி 481 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
தொடர்ந்து 482 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 3-ம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள எடுத்திருந்தது. தொடர்ந்து இன்று காலை தொடங்கிய 4-வது ஆட்டத்தில் களமிற்கிய இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மொயின் அலி, 18 பந்துகளில் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 43 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக வெளியேறினார்.
இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 24-ந் தேதி அகமதாபாத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.