Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
விளையாட்டு

சென்னை ஓட்டலில் கட்டிப்போட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்... கிரிக்கெட் வீரர் சாஹல் கூறிய உண்மை சம்பவம்

Tamil Cricket News : அஸ்வின் சாஹல் இருவரும், உரையாடிய வீடியோ கட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Written by WebDesk

Tamil Cricket News : அஸ்வின் சாஹல் இருவரும், உரையாடிய வீடியோ கட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

author-image
WebDesk
08 Apr 2022 18:30 IST

Follow Us

New Update
சென்னை ஓட்டலில் கட்டிப்போட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்... கிரிக்கெட் வீரர் சாஹல் கூறிய உண்மை சம்பவம்

IPL Cricket Update : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் சுழற்பந்துவீச்சாளர் யுகேந்திர சாஹல், தான் மும்பை அணியில் விளையாடியபோது நடந்த 2 சுவாரஷ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Advertisment

ஐபிஎல் தொடரில் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ந்தேதி தொடங்கியது. இந்த தொடரில் ராஜஸ்தான்அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்துவீச்சாளர் யுகேந்திர சாஹல், இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடி அஸ்வின் தற்போது ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளார்.

தற்போது சாஹல் அஸ்வின் இருவரும் ஒரே அணியில் விளையாடி வருவதால், இருவரும் நெருக்கமாகியுள்ளனர். இதனை குறிக்கும் விதமாக அஸ்வின் சாஹல் இருவரும், உரையாடிய வீடியோ கட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம் சாஹல் கூறிய இரண்டு சம்பவங்கள் தான்.    

Advertisment
Advertisements

2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் 2011-ம் ஆண்டு அறிமுகமானவர் சாஹல். முதலில் மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர்,  மும்பை அணி வீரர்களால் தனக்கு நடந்த பயங்கரமான சம்பவங்கள் குறித்து விவரித்துள்ளார். எப்போதும் துருதுருவென இருக்கும் சாஹல் அவ்வப்போது காமெடியாக சில சம்பவங்களை செய்துவிடுவார்.

ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர்களாக ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் ஆகிய இருவரும் சாஹலுக்கே சம்பவத்தை செய்துள்ளனர். அந்த ஆண்டு பெங்களூருவில் லீக் போட்டிக்காக வந்தோம். போட்டி முடிந்தவுடன் இரவு அணி வீரர்கள் அனைவரும் மது அருந்தி ஜாலியாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சக வீரர்களான சைமண்ட்ஸ் மற்றும் ஃபிராங்க்னின் இருவரும் தன்னை இரவு முழுவதும் கட்டி வைத்ததை மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இரண்டாவது சம்பவத்தில் பெயர் சொல்ல விரும்பாத ஒரு வீரர் "குடிபோதையில் தன்னை15 வது மாடியில் இருந்து தூக்கி வீசி விடுவது போல் நடந்துகொண்டது தான் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில், மும்பை அணியில் ராபின் உத்தப்பா தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து பேசியுள்ளார்.

சாஹல் சொன்ன முதல் சம்பவம் :

2011 –ம் ஆண்டும் சாம்பியன்ஸ் லீக்கை வென்ற பிறகு. இல் சென்னை ஹோட்டலில் தங்கியிருந்தோம். அப்போது சக வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குடிபோதையில் இருந்தார். அப்போது அவருடன் நானும் ஜேம்ஸ் ஃபிராங்க்ளினும் தான் இருந்தோம். அப்போது திடீரென அவர்கள் இருவரும் என் கைகளையும் கால்களையும் கட்டிவிட்டனர். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  என் வாயில் டேப் அடித்ததால் என்னால் பேசவும் முடியவில்லை.

மேலும் அவர்கள் போதையில் இருந்ததால் என்னை முழுவதுமாக மறந்துவிட்டார்கள். பார்ட்டி முடிந்து காலையில் ஒரு ரூம்பாய் வந்து என்னைப் பார்த்துவிட்டு கட்டை அவிழ்த்துவிட்டார். அப்போது அவர் எவ்வளவு நேரமாக இப்படியே இருக்கிறீர்கள் என்று கேட்க நான் இரவு முழுவதும் இப்படியேதான் இருந்தேன்  என்று அவர்களிடம் சொன்னேன்.

TO THINK THIS WASN'T THE FIRST TIME-

Even if it they are laughing on it now, such pranks shouldn't be encouraged. This was in 2011. Two years prior to the balcony incident. pic.twitter.com/DoYui7rOIn

— ALASKA🫀 (@Aaaaaaftab) April 7, 2022

காலையில் சைமண்ட்ஸ் மற்றும் ஃபிராங்க்ளின் இருவரும் மன்னிப்பு கேட்டார்களா என்று போட்காஸ்ட் தொகுப்பாளர் அவரிடம் கேட்டபோது, ​ "இல்லை, அவர்கள் சில நேரங்களில் மதுபோதையில் இருக்கும்பொது, ​​அவர்களால் அதை செய்ய முடியாது. மேலும் இரவில் என்ன, நடந்தது என்பது அவர்களுக்கு நினைவில் இல்லை என்று கூறியுள்ளார்.  

சாஹல் சொன்ன 2-வது சம்பவம் :

“இந்தக் கதையை நான் இதுவரை வெளியில் சொல்லவே இல்லை, இன்று எல்லோருக்கும் தெரியட்டும். இது 2013ம் ஆண்டு மும்பை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியபோது பெங்களூரில் ஒரு போட்டியை முடித்துவிட்டு அனைவரும் ஹோட்டலில், மது அருந்தினோம். அப்போது  ஒரு வீரர் மிகவும் குடிபோதையில் இருந்தார், நான் அவரது பெயரை சொல்ல மாட்டேன். மிகவும் குடிபோதையில் இருந்த அவர், வெகுநேரமாக  என்னை பார்த்துக் கொண்டிருந்தார்.  ஒரு கட்டத்தில்  அவர் என்னை அழைத்தார். அவரிடம் சென்றபோது அவர் என்னை தூக்கிச்சென்று பால்கனியில் தொங்கவிட்டார். இதனால் பயந்துபோன நான் “என் கைகயை அவர் கழுத்துக்கு பின்னால் சுற்றி பிடித்துக்கொண்டேன். அப்போது நான் பிடியை விட்டிருந்தால், 15 வது மாடியில் இருந்து விழுந்திருப்பேன்.

Royals’ comeback stories ke saath, aapke agle 7 minutes hum #SambhaalLenge 💗#RoyalsFamily | #HallaBol | @goeltmt pic.twitter.com/RjsLuMcZhV

— Rajasthan Royals (@rajasthanroyals) April 7, 2022

திடீரென அங்கிருந்த பலர் வந்து என்னை மீட்டனர். அப்போது நான் மயக்கமடைந்தேன், அவர்கள் எனக்கு தண்ணீர் கொடுத்தார்கள். அப்போது நாம் எங்கு சென்றாலும் எவ்வளவு பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன். எனவே, நான் ஒரு நூலிழையில் உயிர் தப்பித்தேன் என்று நான் உணர்ந்த ஒரு சம்பவம் இது. சிறிய தவறுகள் இருந்திருந்தால், நான் கீழே விழுந்திருப்பேன், ”என்று அவர் மேலும் கூறினார்.

ராபின் உத்தப்பா சந்தித்த கசப்பான அனுபவம்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ராபின் உத்தப்பா, மும்பை இந்தியன்ஸுடன் தனது காலத்தின் கசபபான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 2009 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பெங்களூர் அணிக்குஅவர் மாற்றப்படவிருந்தார். ஆனால் இந்த இடமாற்றத்தை அவர் விரும்பவில்லை என்றும், இடமாற்ற பத்திரங்களில் கையெழுத்திட யோசித்துள்ளார்.

அப்போதுதான் மும்பை இந்தியன்ஸைச் சேர்ந்த ஒருவர் (பெயர் சொல்லவில்லை) "இந்த பரிமாற்ற ஆவணங்களில் நீங்கள் கையெழுத்திடவில்லை என்றால், நீங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் லெவன் அணியில், விளையாட முடியாது. எனவே நீங்கள் அதில் கையெழுத்திட்டு இடமாற்றம் பெறலாம் என்று கூறினார். இறுதியாக வேறு வழியில்லாமல் நான் கையெழுத்திட்டேன், ”என்று உத்தப்பா ஆர் அஸ்வினின் யூடியூப் சேனலில் கூறினார்.

இந்த தருணங்கள் "தனிப்பட்ட பிரச்சனைகளுடன்" இணைந்து, அவரை மனச்சோர்வை ஏற்படுத்தியதாக கூறியுள்ள உத்தப்பா “ஐபிஎல்லில் ஜாகீர் கான் மற்றும் மணீஷ் பாண்டேவுடன் வேறு அணிக்கு மாற்றப்பட்ட முதல் வீரர்களில் நானும் ஒருவன். எனது விசுவாசம் முற்றிலும் மும்பை இந்தியன்ஸுடன் இருந்ததால் இந்த மாற்றம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது ... நான் வெளியேற விரும்பவில்லை. "அந்த நேரத்தில் நானும் தனிப்பட்ட ஒரு பிரச்சினையை சந்தித்துக் கொண்டிருந்தேன். மேலும் அது என்னை மேலும் உணர்ச்சிவசப்படுவதற்குள் தள்ளியது.

அந்த காலத்தில் முற்றிலும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். அந்த சீசனில் நான் எந்த போட்டியிலும் சரியாக விளையாடவில்லை.  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து விளையாடினேன். அந்த போட்டியில் மட்டும் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக உணர்கிறேன்.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குறித்து சாஹல்

2018 இல், ப்ரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியில், சைமண்ட்ஸுடனான தனது நட்பைப் பற்றியும், அவர் இன்னும் அவருடன் தொடர்பில் இருப்பது பற்றியும் கூறிய சாஹல், தான்ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது அவருடன் மீன்பிடிக்கச் செல்வது பற்றியும் கூறியுள்ளார். “நான் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போதெல்லாம், அவருடன் மீன்பிடிக்கச் செல்வது எனக்குப் பிடிக்கும்.

அவருடைய மனைவி என பட்டர் சிக்கன் எப்படி சமைக்க வேண்டும் என்று எனக்காக இணையத்தில் உள்ள சமையல் குறிப்புகளைப் பின்பற்றி கற்றுக்கொண்டார். நான் அவர்களைச் சந்திக்க அங்கு சென்றபோது, ​​​​எனக்காக பட்டர் சிக்கன் தயாராக இருந்தது, ”என்று அவர் கூறினார். இருப்பினும், சாஹல் பகிர்ந்து கொண்ட இரண்டு சம்பவங்கள் மற்றும் உத்தப்பாவின் கசப்பான அனுபவம் கடந்த காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இப்படி நடந்துள்ளதாக என்பதை ரசிகர்களுக்கு வெளிச்சம்போட்டி காட்டியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ipl Cricket Yuzvendra Chahal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!