ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரில் இன்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் அடித்த பந்து ஸ்பைகேம் வயரில் பட்டு கேட்ச் பிடிகக முடியாததால் இந்திய வீரர்கள் அதிருப்தியடைந்தனர்.
டி20 உலககோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிங்கிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதில் 3-வது விக்கெட்க்கு இணைந்த ஷான் மசூத் இப்திகார் அகமது ஆகிய இருவரும் 76 ரன்கள் சேர்த்தனர். இதில் இப்திகார் அகமது 34 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசிவரை களத்தில் இருந்த ஷான் மசூத் 42 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. முன்னதாக இந்த போட்டியின் 15-வது ஓவரில் 31 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த மசூத், அஸ்வீசிய பந்தை மேல்நோக்கி அடித்தார். இந்த பந்தை பிடிக்க விராட்கோலி லாக்கில் இருந்து ஓடி வந்த நிலையில், பந்து ஸ்பைகேம் கேபிளில் பட்டு அதே இடத்தில் விழுந்துவிட்டது. இதனால் டென்ஷன் ஆன கேப்டன் ரோகித் சர்மா கேபிளை மேலே தூக்குமாறு சைகை காண்பித்தார்.
அதேபோல் மசூத் ஆட்டமிழக்க போகிறார் என்று எதிர்பாத்துக் கொண்டிருந்த இந்திய வீரர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது. பந்து கேபிளில் பட்டதை பார்த்த ஹர்திக் பாண்டியா டென்ஷனில் கத்தினார். மசூத் வெளியேறுவதை ஸ்பைகேம் கேபிள் தடுத்து நிறுத்தியதால் அவர் அரைசதம் கடந்தார். நடுவர் இந்த பந்தை டெட்பால் என்று அறிவித்தாலும் மசூத் அவுட் மிஸ் ஆகிவிட்டதே என்று இநதிய வீரர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதனிடையே 160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தாலும், 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் விராட்கோலி ஹர்திக் பாண்டியா இருவரும் 113 ரன்கள் சேர்த்தனது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. 82 ரன்களுடன் விராட்கோலி களத்தில் இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“