scorecardresearch

விராட் கோலி அவுட்; மோசமான அம்பயரிங்..! ட்விட்டரில் வெடித்த ரசிகர்கள்

முன்னாள் கேப்டன் விராட்கோலி, அரைசதத்தை நெருங்கிய நிலையில், 84 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்

விராட் கோலி அவுட்; மோசமான அம்பயரிங்..! ட்விட்டரில் வெடித்த ரசிகர்கள்

டெல்லியில் நடைபெற்று வரும் ஆஸதிரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரரான விராட்கோலி ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று (பிப் 17) தொடங்கியது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்களில் ஆட்டமிழந்தது. அதன்பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இன்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 262 ரன்களில் ஆட்டமிழந்து ஒரு ரன் பின்தங்கியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி, அரைசதத்தை நெருங்கிய நிலையில், 84 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது குக்னிமேன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் இந்த அவுட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குக்னிமேனின் பந்துவீச்சை எதிர்கொண்ட விராட்கோலி, தற்காத்துக் கொள்ள முயன்றபோது பந்து பேட்டை கடந்தது. ஆனாலும், ஒரே நேரத்தில் பேட் மற்றும் பேடு இரண்டையும் உரசியது. இதனால் ஆஸ்திரேலியா அணி விக்கெட் கேட்டு அப்பீல் செய்ய இந்திய நடுவர் நிதின் மேனன் விக்கெட் கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விராட்கோலி, மேல்முறையீடு செய்தார். மேலும் மறுமுனையில் இருந்த இந்திய வீரரிடம், விராட் பந்து லெக் சைடில் சறுக்குகிறது என்று கூறியுள்ளார். ஆனால் டிவி ரீப்ளேகளில், பந்து பேட் மற்றும் பேடு இடையே சாண்ட்விச் செய்யப்பட்டதால் ஒரு ஸ்பைக் இருப்பதை அல்ட்ராஎட்ஜ் காட்டியது. இதனால் கோலி அதை எட்ஜ் செய்ததாகத் கூறி நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்று கூறியதால், ஆஸி., அணியினர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் விராட்கோலி விரக்தியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதனிடையே சர்ச்சைக்குரிய முறையில் அவுட் ஆனதால் விரக்தியடைந்த விராட்கோல ஓய்வறையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.1 ரன் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Tamil sports ind vs aus 2nd test virat kholi controversial out