Advertisment

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் : இந்த சேனலில் தமிழில் பார்க்கலாம்

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கலர்ஸ் தமிழல் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது

author-image
WebDesk
New Update
Indian Cricket Team

கலர்ஸ் தமிழில் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

India vs Australia Live Streaming :  இந்திய அணி தற்போது ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடி வருகிறது. வரும் 17ஆம் தேதிவரை  இந்திய அணி இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரை முடித்துவிட்டு இந்தியா திரும்பும் இந்திய அணி,  அதன்பிறகு சொந்த மண்ணில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

Advertisment

இந்தியாவில் நடைபெறுவதால் இந்த தொடர் இரு அணிகளுக்கும் உலகக்கோப்பைக்காக தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி சண்டிகர் அசோசியேசன் மைதானத்தில் வரும் 22ஆம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹொல்கர் மைதானத்தில் 24ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்ட்ரா மைதானத்தில் 27ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்த மூன்று போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்கவுள்ளது. அதேபோல் மூன்று போட்டிகளும் உலகக்கோப்பைத் தொடருக்கு தயார் செய்யப்பட்ட 12 மைதானங்களில் இல்லாமல் மற்ற  மற்ற மைதானங்களில் நடத்தப்படுகிறது. உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக இந்தியாவில் நடக்கவுள்ள போட்டித் தொடர் என்பதால், இரு அணிகளும் உலகக்கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியுடன் தான் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடர் முழுவதும் ஜியோ சினிமா டிஜிட்டல் தளத்தில் நேரடியாக ஒளிபரப்படவுள்ளது. ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் ஆங்கிலத்திலும், கலர்ஸ் சினிபிக்ஸ் சேனலில் ஹிந்தியிலும், கலர்ஸ் கன்னடா, கலர்ஸ் தமிழ் மற்றும் கலர்ஸ் பெங்காலி சேனலிலும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்படவுள்ளது.

இந்திய அணி விபரம்

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றூம் முகமது ஷமி,

ஆஸ்திரேலிய அணி

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா, ஆஷ்டன் அகர், ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட் , கேமரூன் கிரீன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment