ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியில், கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டது குறித்து ரசிகர்கள் பலரும் பிசிசிஐ மீது தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த இரண்டு போட்டிகளும் 3 நாட்களில் முடிவடைந்தது. இதனிடையே 3-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1-ந் தேதி தொடங்க உள்ளது. 4வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 9-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த இரு போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி இன்று (பிப் – 19) அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தன் மூலம் கவனம் ஈர்த்து வரும் சர்ஃப்ரஸ் கான் மீண்டும் இந்த அணியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், டி20 மற்றும் ஒருநாள் அணியில் வழக்கமாக இருந்து வரும் நிலையில், தற்போது இந்த டெஸ்ட் தொடரின் மீதமுள்ள போட்டிகளிகளுக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 2-வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து மீண்டு வந்ததால் சூர்யகுமார் யாதவ் ஓரங்கட்டப்பட்டார்.
@BCCI Will Sarfaraz Khan not get a chance give Kl Rahul some rest he needs a break don't be partial with him .
— Ms (@myworldisonyong) February 19, 2023
இது குறித்து ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், சூர்யகுமார் எனக்கு நல்ல நண்பர். மேலும் நாங்கள் அணியில் இருக்கும் போது ஒன்றாக நிறைய நேரம் செலவிடுகிறோம். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். அவர் விளையாடும் விதம், அவர் தனது அனுபவத்தை ஒன்றாக எடுத்துக்கொண்டார், அதனால் விஷயங்களை எளிதாக்குகிறது என்று கூறியுள்ளர்.
What is the fault of #sarfarazkhan,
— Sandeep (@ssandeep1117) February 19, 2023
Now when #KLRahul has to be kept in the team,
Then the people of the world can say whatever they want.#BCCI #SanjuSamson #sarfarazkhan pic.twitter.com/bG7Uz4vM37
இதனிடையே சமீபகாலமாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாத கே.எல்.ராகுலுக்கு மீண்டும் அணியில் தேவு செய்யப்பட்டுள்ளது பலரின் ஆதங்கத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக சர்ஃப்ராஸ் கான் உள்நாட்டு கிரிக்கெட்டில் பரபரப்பான ஃபார்மில் இருந்தும் இந்திய தேர்வாளர்களை கவர முடியவில்லை. அதே சமயம் பல தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் கே.எல்.ராகுலுக்கு அணியில் ஆதரவு இருப்பதை கண்டு சமூக ஊடகங்களில் உள்ள ரசிகர்கள் சர்ஃபராஸை தேர்வு செய்யாததற்காக நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளனர்.
#TeamIndia 's squad for #INDvAUS remaining tests
— Chup Bey! (@stud88282483) February 19, 2023
Rohit (C), Rahul, Gill, Pujara, Virat Bharat (wk), Kishan (wk), Ashwin, Axar, Kuldeep, Jadeja, Shami, Siraj, Iyer, Surya, Umesh, Unadkat
No place for Sarfaraz as of yet. Also there was no mention of the VC.#BorderGavaskarTrophy pic.twitter.com/TAGkZ77iPX
இதனிடையே கே.எல்.ராகுலுக்கு ஆதரவாக பேசியுள்ள கேப்டன் ரோகித் சர்மா, “தாமதமாக, அவரது பேட்டிங் பற்றி நிறைய பேசப்பட்டது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை, அணி நிர்வாகமாக, கடந்த காலத்தில் கே.எல் மட்டுமல்ல, எந்தவொரு தனிநபரின் திறனையும் நாங்கள் எப்போதும் பார்க்கிறோம். திறன் இருந்தால், அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். கேஎல் ராகுல் வெளிநாட்டில் அடித்த இரண்டு சதங்களைப் பார்த்தால், டாஸ் இழந்து, ஈரமான பிட்ச்சில் பேட்டிங் செய்த லார்ட்ஸ் மைதானத்தில் தான் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே எல் ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஎஸ் பாரத் (வி.கே), இஷான் கிஷன் (வி..கே), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“