2023-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் நடைபெற்றது. இதில் சில இளம் வீரர்களை ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், நிஷாந்த் சிந்து என்ற இளம் வீரர் இணைந்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு உலகளவில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளை சேர்ந்த வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இதுவரை 15 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 16-வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.
இதனிடையே இந்த தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் கொச்சியில் நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஹானே, பென் ஸ்டோக்ஸ், பகத் வர்மா, அஜய் மன்டல், கைல் ஜேமிசன், நிஷாந்த் சிந்து, ஷேக் ரஷீத், உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
இதில் ஆல்ரவுண்டராக அணிக்கு வந்துள்ள ஹரியானாவின் ரோஹ்தக்கைச் சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் 18 வயதான நிஷாந்த் சிந்து, கடந்த ஆண்டு இதே நேரத்தில் சிந்து மேற்கிந்திய தீவுகளில் நடந்த U-19 உலகக் கோப்பைக்கு தயாராகிக்கொண்டிருந்தார். விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் தீவிர ரசிகராக இருக்கும் இவர், தனது இயல்பான ஆட்டத்தை நம்பி அணியின் வெற்றிக்கு பங்களிக்க விரும்பியுள்ளார்.
அதன்படி கரீபியனில் ஐந்து ஆட்டங்களில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சிறந்த செயல்திறன் கொண்டவர்களில் ஒருவராக இருந்தார். இதனிடையே இன்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரூ. 60 லட்சத்திற்கு அவரை ஏலத்தில் எடுத்ததால், ஐபிஎல்லில் இடம்பிடிக்கும் அவரது கனவு நனவாகியது.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் எப்போதும் ஐபிஎல்லில் விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன், அதை மனதில் வைத்துக்கொண்டு, விரைவில் போட்டியில் இடம்பெறும் வாய்ப்பைப் பெற வேண்டும் எடின்று என்னை தயார்படுத்திக் கொண்டேன். கடின உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்று கூறியுள்ளார்.
வதோதராவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 110 ரன்கள் எடுத்திருந்த சிந்துவுக்கு இது ஒரு நல்ல அவுட்டாகும். போட்டி முடிந்த பிறகு, சிந்து தனது ஹரியானா அணி வீரர்களுடன் தனது போனில் ஐபிஎல் ஏலத்தை பார்த்துக்கொண்டிருந்தார். "நான் ஒரு நல்ல இன்னிங்ஸ் விளையாடினேன். ஆனால் போட்டி டிராவில் முடிந்தது.
போட்டி முடிந்ததும், எனது பெயர் ஏலத்திற்கு வந்தபோது, நாங்கள் போனில் ஏலத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். தோனி சார் தலைமையில் விளையாடுவது ஒரு கனவு. அது தற்போது நனவாகியுள்ளது. அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். எல்லோரும் ஐபிஎல் விளையாட விரும்புகிறார்கள், இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எனக்கு ஒரு சிறந்த தருணம், ”என்று கூறியுள்ளர்.
கிரிக்கெட் வீரராக மாறிய குத்துச்சண்டை வீரர்
கிரிக்கெட்டைத் தொடரும் முன், நிஷாந்த், மாநில அளவிலான குத்துச்சண்டை வீரரான தனது தந்தை சுனில் சிந்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, குத்துச்சண்டை வீரராகப் பயிற்சி பெற்றார். ஆனால் ஹரியானா முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் அஸ்வனி குமார் நடத்தும் அகாடமியில் சேர்ந்த பிறகு கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
2018-19 யு-16 விஜய் மெர்ச்சன்ட் டிராபியில் சிந்து 572 ரன்கள் குவித்து 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இறுதிப் போட்டியில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக ஹரியானாவை வெற்றிபெறச் செய்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் குத்துச்சண்டை விளையாடத் தொடங்கியபோது, கிரிக்கெட் விளையாடுவதைப் பற்றி நான் நினைக்கவில்லை, மேலும் ஐபிஎல்லில் விளையாடுவது பற்றி நான் கற்பனை கூட செய்யவில்லை. ஆனால் எல்லா விஷயங்கள் நடந்தன, நான் இப்போது ஐபிஎல்லின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஜடேஜாவின் ரசிகராக இருப்பதால், நிஷாந்த் இப்போது சிஎஸ்கே டிரஸ்ஸிங் ரூமில் அவரைச் சந்திக்கும் போது அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறார். “யு-19 உலகக் கோப்பைக்குப் பிறகு, ஐபிஎல்லுக்குத் தயாராக வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. இப்போது தயாராக இருப்பதும், வாய்ப்புக்காகக் காத்திருப்பதும்தான் நோக்கம், வாய்ப்பு என் வழியில் வந்தால், நூற்றுக்கு நூறு சதத்தைக் கொடுக்க வேண்டும்” என்று சிந்து உணர்ச்சியுடன் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.