scorecardresearch

’30 வயதுக்கு மேல யார் வந்தாலும் தூக்கிட்டு வந்துடு’: மீம்ஸ் மெட்டீரியலாக மாறிய சி.எஸ்.கே

அடிப்படை விலையாக 50 லட்சம் நிர்ணையம் செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் அஜிங்க்யா ரஹானேவை அதே 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

’30 வயதுக்கு மேல யார் வந்தாலும் தூக்கிட்டு வந்துடு’: மீம்ஸ் மெட்டீரியலாக மாறிய சி.எஸ்.கே

கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசனுக்காக ஏலத்தில் இந்திய அணியின் டெஸ்ட் வீரர் அஜிங்க்யா ரஹானேவை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது குறித்து இணையத்தில் கடுமையாக மீம்ஸ் பதிவிடப்பட்டு வருகிறது.

உலகளவில் மிகவும் பிரபலமாக கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் இதுவரை 15 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 16-வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதனிடையே இந்த தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் கொச்சியில் இன்று நடைபெற்றது.

இதில் அடிப்படை விலையாக 50 லட்சம் நிர்ணையம் செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் அஜிங்க்யா ரஹானேவை அதே 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம் சென்னை அணி 30 வயதைக் கடந்த அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் தங்களது பாரம்பரியத்தை தொடர்ந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்காக விளையாடி வந்த ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் இரு அணிகளிலும் அதிகமான போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். ஐபிஎல் தொடரில் இதுவரை அஜிங்க்யா ரஹானே  158 ஆட்டங்களில் இரண்டு சதங்கள் உட்பட 30.86 சராசரியில் 4074 ரன்கள் குவித்துள்ளார்.

இந்நிலையில், அஜிங்க்யா ரஹானேவை சென்னை அணி வாங்கியது குறித்து சென்னை அணியின் தீவிர ரசிகர்கள் தங்களது கலவையான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மீம்ஸ்களாக வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் சென்னை அணியில் இணைந்தது குறித்து வீடியோ வெளியிட்டள்ள ரஹானே, “சிஎஸ்கே குடும்பத்தில் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். 34 வயதான அவர் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதற்கு உற்சாகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சிஎஸ்கே அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில் நன்றி தெரிவித்து ரஹானே, “அனைத்து சிஎஸ்கே  ரசிகர்களுக்கும் வணக்கம். சிஎஸ்கே குடும்பத்தில் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன், மேலும் ஒவ்வொரு வீரரிடமிருந்தும் கற்றுக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். அனைத்து ரசிகர்களுக்கும், உங்கள் ஆதரவு பல ஆண்டுகளாக ஆச்சரியமாக இருந்தது.அது உண்மையில் நிறைய அர்த்தம்.

அணிக்கு. தனிப்பட்ட முறையில், சென்னை மற்றும் சேப்பாக்கத்தில் விளையாடுவதில் நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி. சியர்ஸ்!” என்று கூறியுள்ளார். மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் கைல் ஜேமிசன் போன்ற சர்வதேச நட்சத்திரங்களை சென்னை அணி வாங்கியது. அவர்கள் நிஷாந்த் சிந்து மற்றும் ஷேக் ரஷீத் போன்ற இளம் வீரர்களும் அணியில் உள்ளனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Tamil sports ipl cricket ajinkya rahane in csk team 16th ipl cricket viral memes

Best of Express