Advertisment

கேப்டனாக ரீ-என்ட்ரி கொடுத்த பும்ரா... அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்து அயர்லாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

author-image
WebDesk
New Update
Jasprit Bumrah likely to miss IPL 2023, WTC final Tamil News

Jasprit Bumrah unlikely for IPL 2023, WTC Final Tamil News

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியின் கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்த நிலையில், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத உள்ளது.

இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடருக்காக இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக சமீபத்திய தொடரில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது உடல் நிலை தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், பெங்களூருவில் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி மீண்டும் அணிக்கு திரும்பி கேப்டன் பொறுப்பேற்க உள்ளார். இந்த அணியின் துணைக்கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார் மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னாய், ஷாபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் பலர் இடம் பெற்றுள்ளனர்.

டி20 தொடருக்கான இந்திய அணி:

ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னாய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment