scorecardresearch

புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ் – பெங்கால் வாரியர்ஸ் ஆட்டம் டிரா

இன்று தொடங்கிய லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் முன்னிலை பெற்றது.

புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ் – பெங்கால் வாரியர்ஸ் ஆட்டம் டிரா

12 அணிகளுக்கு இடையிலான புரோ கபடி லீக் போட்டி கடந்த 7-ந் தேதி தொடங்கியது.  இதில் புனேயில் இன்று தொடங்கிய லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் முன்னிலை பெற்றது. ஆனாலும் அடுத்து அதிரடியாக ஆடிய பெங்கால் வாரியஸ் அணி புள்ளிகளை வேகமாக சேர்த்தது. இதனால் இந்த போட்டியில் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிரிகத்தது.

ஆனால் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டம் முடிவில் 41-41 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. முந்தைய 2 ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றிக்கனியை பறித்த தமிழ் தலைவாஸ் அணி இந்த போட்டியில் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் டை ஆனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அமைந்துள்ளனர்.

இந்த போட்டியுடன் மொத்தம் 9 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 3 வெற்றி, 4 தோல்வி, 2 டை என 23 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது. அதே சமயம், பெங்கால் வாரியர்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி 4 தோல்வி 1 டை என 26 புள்ளிகள் பெற்று 8 வது இடத்தில் உள்ளது.

தொடர்ந்து தமிழ் தலைவாஸ் அணி வரும் நவம்பர் 5-ந் தேதி தெலுங்கு டைட்டன்ஸ்அணியுடன் மோதுகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Tamil sports pro kabaddi league tamil thalaivas bengal warriors match tie