Pro Kabbadi League Update : கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் புரோ கபடி லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7 தொடர்கள் நடந்துள்ளது. இதில் பாட்னா அணி 3 முறையும். ஜெய்பூர், மும்பை பெங்களூர், பெங்கால் ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதில் கடைசியாக கடந்த 2019-ம் நடைபெற்றதொடரில் பெங்கால் அணி சாம்பயன் பட்டம் வென்றது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த கடந்த ஆண்டு தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில், 8-வது ப்ரோ கபடி சீசன் இன்று தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றுகளின் முடிவில், முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேறும். இதில் முதல் 2 இடங்களை பெறும் அணிகள் நேரடியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
மீதமுள்ள 4 அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெறும். தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் தீவிரமடைந்து வருவதால், பெங்களூருவில், உள்ள ஷெராட்டன் கிராண்ட் ஒயிட் பீல்ட் ஓட்டல் மைதானத்தில் மட்டும் போட்டி நடத்தப்படுகிறது. மேலும் இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் வீரர்கள் அனைவரும் உயிர்பாதுகாப்பு வளையத்தில் உள்ள நிலையில், அனைவரும் வெளியில் செல்லும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி 40-40 என்ற கணக்கில் டிராவில் முடிந்ததது. ஒரு கட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸை விட 9 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்த தமிழ் தலைவாஸ் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிகட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் எழுச்சி பெற்றதை தொடர்ந்து ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதில் ரெய்டில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 22 புள்ளிகளும், தமிழ் தலைவராஸ் அணி 20 புள்ளிகளும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் தலைவாஸ் அணி தனது2-வது ஆட்டத்தில், வரும் 27-ந் தேதி மும்பை அணியுடன் மோத உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil