அஸ்வின் உள்ளே... தவான் வெளியே... டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
Tamil Sports Update : ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17-ந் தேதி தொடங்கவுள்ள உலககோப்பை டி20 தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Sports Update : ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17-ந் தேதி தொடங்கவுள்ள உலககோப்பை டி20 தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
T20 Worldcup Indian Team Update : 7-வது டி20 உலக்கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் இடம்பெறாத நிலையில், சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சுமார் 4 வருடங்களுக்கு பிறகு டி20 அணியில் இடம் பிடித்துள்ளார்.
Advertisment
கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஐசிசி டி20 உலக்கோப்பை தொடரை நடத்தி வருகிறது. இதுவரை 6 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், 7-வது டி20 உலக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17-ந் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெறுகிறது. வரும் நவம்பர் 14-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டித் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான். நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, உட்பட16 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.
இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் வரும் செப்டம்பர் 10-ந் தேதிக்குள் தங்களது அணியை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது வீரர்கள் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், உலககோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் நட்ராஜன், தொடக்க ஆட்டகாரர் ஷிகர் தவான், மற்றும் தமிழக சுழற்பந்துவீச்சளார் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெறவில்லை .
ஆனால் தமிழகத்தை சேர்ந்த சுழ்பந்துவீச்சாளர் அஸ்வின் சுமார் 4 வருட இடைவெளிக்கு பிறகு இந்தியாவின் டி20 அணியில் இடம் பிடித்துள்ளார். சமீப காலமாக இந்தியாவுக்காக டெஸ்ட் தொடரில் மட்டுமே ஆடிவரும் அஸ்வின் கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன்பிறகு ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வந்த அஸ்வின் தற்போது உலக்கோப்பை டி20 தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.
Advertisment
Advertisements
இதேபோல் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ராகுல் சஹார், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். இதில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் கடந்து அசத்திய ஷர்துல் தாகூர் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மாற்று வீர்ர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவருடன் சேர்த்து ஸ்ரோயாஸ் அய்யர், தீபக் சஹார் ஆகியோரும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி செயல்படுவார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தோனி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.