பரிசாக வந்த காரை தனது பயிற்சியாளருக்கு வழங்கிய நடராஜன் : குவியும் வாழ்த்துக்கள்

கிரக்கெட் வீரர் நடராஜன் தனக்கு பரிசாக வந்த காரை தனது பயிற்சியாளருக்கு பரிசாக வழங்கியுள்ளர்.

Tamil Sports Update Cricketer Natarajan Gift Car To His Coach : தனியார் நிறுவனம் தனக்கு பரிசாக வழங்கிய காரை கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது பயிற்சியாளருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தவர் டி.நடராஜன். தமிழகத்தின் சேலம் மாவட்டம் சின்னப்பட்டியை சேர்ந்த அவர், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் எதிரணி வீரர்களின் வீழ்த்தி புகழ் பெற்றார். ஏர்க்கர் பந்துவீச்சில் அசத்தி வரும் நடராஜன், டி20 போட்டிகளில் இறுதிகட்ட ஓவர்களில் அசத்தலாக பந்துவீசி வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசஸ் அணியில் இடம்பெற்றிருந்த இவர் சிறப்பாக பந்துவீசியதன் மூலம் அந்த அணியின் கேப்டன் வார்னரின் மனதை கவர்ந்தார். மேலும் பல பேட்டிகளில் நடராஜனின் பந்துவீச்சு குறித்து புகழ்ந்து பேசிய வார்னர் விரைவில் சர்வதேச போட்டிகளில் சந்திப்போம் என்று கூறியிருந்தார்.

அவர் சொன்னபடியே ஐபிஎல் தொடர் முடிந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நெட் பந்துவீச்சளராக வாய்ப்பு பெற்ற நடராஜன் முதன் முதலாக இந்திய அணியில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் அந்த தொடரில் முன்னணி பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியதை தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்றார். அதனைத் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் வாய்ப்பு பெற்று தனது திறமையை நிரூபித்தார்.

இதன் மூலம் நெட் பவுலராக அணியில் வாய்ப்பு பெற்று ஒரே தொடரில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் வாய்ப்பு பெற்று சாதனை படைத்தார். தற்போதைய இந்திய அணியில் பெரும்பாலும் இடம்பிடித்து வரும் நடராஜன் குறுகிய காலத்தில் இந்தியாவே பாராட்டும் அளவுக்கு தனது திறமையை நிரூபித்துள்ளார். இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய அறிமுக வீரர்களான டி.நடராஜன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சுப்மான் கில், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் ஆகிய இந்திய வீரர்களை கூக்கப்படுத்தும் வகையில் கார் பரிசாக வழங்குவதாக மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த மகேந்திரா அறிவித்திருந்தார்.

தமிழக வீரர் நடராஜனுக்கு மஹிந்திராவின் புதிய மாடலான தார் காரை பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வந்த நிலையில், தனக்கு மஹிந்திரா நிறுவனம் பரிசளித்த காரை தனது பயிற்சியாளரும் நலம் விரும்பியுவிமான ஜெயபிரகாஷ் என்பவருக்கு பரிசலித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த செயலுக்காக நடராஜனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இது குறித்து நடராஜன் தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடுவது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம். எனது வாழ்வில், நான் பெற்ற அன்பும் பாசமும் என்னை மூழ்கடித்தன. அற்புதமான நபர்களின் ஆதரவும் ஊக்கமும், எனக்கு நல்ல  வழிகளைக் கண்டறிய உதவுகிறது. தற்போது எனது எழுச்சி அசாதாரண பாதையில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil sports update cricketer natarajan gift to coch

Next Story
புனே அணியையும் இறுதிபோட்டிக்கு கொண்டு சென்றவர் ‘தோனி’ தான் – முன்னாள் வீரர்Ipl cricket Tamil News MS Dhoni was the reason Pune reached IPL 2017 final, not Steve Smith: Rajat Bhatia
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com