India Vs England 3rd ODI IN Pune Stadium : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலாக 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து அணி அடுத்து 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த்தால் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்தர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த தொடரில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2-2 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருந்த்து. ஆனால் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய 5-வது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் அசத்தல் பந்துவீச்சில் சிக்கிய இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் இழந்தது. இந்த இரு தொடர்களிலும் இங்கிலாந்து அணி வெற்றியுடன் தொடங்கினாலும், கடைசியில் இந்திய அணியிடம் சரணடைந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புனே மைதானத்தில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது.
இதில் முதல் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகண்டது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனே மைதானத்தில் இன்று தொடங்கியது. வழக்கம் போல இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த தொடரில் 3 போட்டிகளிலும் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த்து குறிப்பிடத்தக்கது.
ரோகித் – தவான் தொடக்கம் அதிரடி :
இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர்தவான் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர். இதனால் இந்திய அணியின் ரன் விகிதம் கனிசமான உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 14.4 ஓவர்களில் 103 ரன்களை எட்டிய போது தொடக்க ஜோடி பிரிந்தது. 37 பந்துகளை சந்தித்த ரோகித்சர்மா 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க ஆட்டகாரர் ஷிகர் தவான் அரைசதம் கடந்த நிலையில், 56 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேபடன் விராட்கோலி 7 ரன்களிலும், கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய ராகுல் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட் சரிந்தாலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையா ரன் விகிதத்தை உயர்த்தினார். இதனால் இந்தியாவின் ரன்ரேட் 7-க்கு குறையாமல் இருந்தது.
ரிஷப் பண்ட் – ஹர்திக் பாண்டியா அசத்தல் :
தொடர்ந்து 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹர்திக்பாண்டிய – பண்ட்டுடன் ஜோடி சேர்ந்த்து அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தார். இதில் டி20 போட்டிகள் போல் அதிரடியில் அசத்திய ரிஷப பண்ட் அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் இந்திய அணியின் ரன் விகிதம் ஓவருக்கு அதிகமாக கடந்து வந்த நிலையில், அணியின் ஸ்கோர் 36 ஓவர்களில் 256 ரன்களை தொட்டபோது ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், 62 பந்துகளை சந்தித்த பண்ட் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பண்ட் ஹர்திக் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது. அடுத்த சில நிமிடங்களில் ஹர்திக் பாண்டியவும் ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த அவர், 44 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 64 ரன்கள் குவித்தார்.
தாகூர் – குருணால் பாண்டியா அதிரடி :
தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாகூர் குருணால் பாண்டியாவுன் ஜோடி சேர்ந்து அதிரடியில் இறஙகினார். ஒரு கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் ரன் குவிப்பில் ஈடுபட்ட தாகூர் 21 பந்துகளில் 3 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 30 ரன்கள் குவித்தார். தொடர்ந்து குருணால் பாண்டியா 35 பந்துகளில் 25 ரன்களும், பிரசித் கிருஷ்ணா 0 ரன்களிலும், புவனேஷ்வர் குமார் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நடராஜன் ரன் ஏதும் எடுக்கமால் களத்தில் இருந்தார். இந்திய அணி 48 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில், மார்க்வுட் 3 விக்கெட்டுகளும், ரஷித் 2 விக்கெட்டுகளும், லிவிங்ஸ்டன், மொயின் அலி, சாம்கரன், ஸ்டோக்ஸ், டெப்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 330 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஜானி பேர்ஸ்டோ 1 ரன்னிலும், ஜோசன் ராய் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து பெஸ் ஸ்டோக்ஸ் டேவிட் மிலன் ஜோடி சற்று தாக்குபிடித்து ஆடியது. கடந்த போட்டியில் அதிரடியில் மிரட்டிய பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியிலும் அதிரடியாக ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால் இங்கிலாந்து அணியில் ரன் விகிதம் உயர்ந்த நிலையில், 39 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்திருந்த பென் ஸ்டோக்ஸ் நட்ராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து அரைசதம் கடந்த டேவிட் மிலன் 50 ரன்களிலும், கேப்டப் பட்லர் 15 ரன்களிலும், சற்று அதிரடி காட்டிய லிவிங்ஸ்டன் 36 ரன்களுக்கும், மொயின் அலி 29 ரன்களுக்கும், ஆடில் ரஷித் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும் மறுமனையில் அதிரடியான ஆடி முதல் அரைசதம் கடந்த சாம் கரண் இங்கிலாந்து அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தார். இவருக்கு மார்க்வுட் பக்கபலமாக விளையாடினார்.
தொடர்ந்து இங்கிலாந்து அணி வெற்றியை நெருங்கிய நிலையில் கடைச ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசிய தமிழக வீரர் நட்ராஜன் முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்க முயன்று மார்க்வுட் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து 2-வது பந்தில் டிம்பிலி ஒரு எடுக்க 3-வது மற்றும் 4-வது பந்தை டாட் செய்த சாம் கரன் 5 வது பந்தில் பவுண்டரி அடித்தார். தொடர்ந்து கடைசி பந்தில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், டாட் பாலாக சென்றதால். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் மட்டுமே எடுத்த்து. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி வரை வெற்றிக்காக போராடிய சாம் கரன், 83 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 95 ரன்களுடனும், டிம்பிலி 1 ரன்னுடளும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் தாகூர் 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், நடராஜன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.