Advertisment

Ind Vs Eng 3rd Test : சதத்தை நெருங்கிய புஜாரா... 2-வது இன்னிங்சில் நிதானம் காட்டும் இந்தியா...

Tamil Cricket Update : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸட் போட்டியில் இந்திய அணி பந்துவீ்ச்சில் சறுக்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Ind Vs Eng 3rd Test : சதத்தை நெருங்கிய புஜாரா... 2-வது இன்னிங்சில் நிதானம் காட்டும் இந்தியா...

Indian Vs England 3rd Test update : இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நேற்று தொடங்கியது.

Advertisment

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி இங்கிலாந்து வீரர்களின் சிறப்பாக பந்துவீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.  இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.4 ஓவர்ளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 19 ரன்களும், ரஹானே 18 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறிய நிலையில், ராகுல் ஷமி பும்ரா மூவரும் ரன் கணக்கை தொடங்காமலே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், சாம் கரண் ராபின்சன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்து 42 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் 2-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி கனிசமான ரன்குவிப்பில் ஈடுபட்டுள்ளது.

அரைசதம் கடந்த தொடக்க ஆட்டகாரர்கள் ராய பர்ன், 61 ரன்களிலும்,  ஹமீது 68 ரன்களிலும், மிலன் 70 ரன்களிலும், ஆட்டமிழந்த நிலையில், தொடர்ச்சியாக 3-டெஸ்ட போட்டியில் சதம் கடந்த கேப்டன் ஜோரூட் 121 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோ 29, பட்லர் 7 மொயின் அலி 8 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில்,  இன்றைய 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 129 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்து இந்திய அணியை விட 345 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இன்று நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து அணி 132.2 ஓவா்களில் 432 ரன்கள் குவித்து ஆட்டமிழ்ந்தது. இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளும், பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 354 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு சுமாரான தொடக்கம் கொடுத்த ராகுல் 54 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அனுபவ வீரர் புஜாரா சிறப்பாக விளையாட மறுமுனையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ரோகித்சர்மா 154 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் விராட்கோலி புஜாராவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் இந்திய அணியின் ஸ்டோர் கனிசமாக உயர்ந்த நிலையில், 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 180 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 91 ரன்களும், கேப்டன் கோலி 94 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 45 ரன்களும் குவித்து களத்தில் உள்ளனர். தற்போதுவரை இந்திய அணி 139 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், கைவசம் 8 விக்கெட்டுகள் மீதமுள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில், நாளைய ஆட்டம் இந்திய அணிக்கு கடும் சவால் நிறைந்ததாக இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Sports Update Ind Vs Eng
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment