விராட்கோலி அவுட்டா? இல்லையா? மும்பை டெஸ்ட் போட்டியில் வெடித்த சர்ச்சை

Tamil Sports News : மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அவுட் ஆன விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Sports Update : இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கிய நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அவுட் ஆன விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கடைசி விக்கெட் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கடந்த போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ரஹானே, ஜடேஜா, இஷாந்த சர்மா ஆகியோர் நீக்கப்பட்டு, கேப்டன் கோலி, ஜெயந்த் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர். தொடர்ந்து முதலில் களமறங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 70 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாநதில் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

முன்னதாக இந்த போட்டியில், முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த நிலையில், தொடக்க ஆட்டகாரர் சுபமான் கில் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா மற்றும் கேப்டன் கோலி இருவருமே ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தனர். இதில் 4 பந்துகளை சந்தித்து ரன் எடுக்காமல் ஆட்டமிழந்த கேப்டன் கோலியின் விக்கெட் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

அஜாஸ் பட்டேலின் ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்த கேப்டன் கோலி டிஆர்எஸ் எடுக்க முடிவு செய்தார். ஆனால் டச் அண்ட் கோ, மற்றும் ஆன்-பீல்ட் முடிவை மாற்றுவதற்கு ஏற்றதாக அமையவில்லை. தொடர்ந்து மூன்றாவது நடுவர் வீரேந்தர் ஷர்மா, கள நடுவர் அனில் சௌத்ரியின் முடிவையே அறிவித்ததால், விராட்கோலி விரக்தியுடன் பெவிலியன் திரும்பினார். ஆனால் விராட்கோலியின் இந்த அவுட் சமூக வலைதளங்களில் சர்ச்சையாக வெடித்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் பருவமழை பெய்ததால் மைதானம் ஈரப்பதாமாக இருந்தது. இதனால் இன்றைய போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முழங்கை காயத்தால் அவதிப்படுவதால் இந்த போட்டியில் இருந்து அவர் விலகியுள்ள நிலையில், தொடக்க ஆட்டகாரர் டாம் லாதம் நியூசிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் விராட்கோலி, “ஒரு நல்ல விக்கெட் போல் தெரிகிறது, ஆரம்பத்தில் நன்றாகவும் பிறகு கடினமாகவும் இருக்கும் என்று நினைக்கிறென்.. மைதனத்தில் அதிக புல் இல்லை” முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய சிறந்த நேரமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். என்று கூறியிருந்தார்.

நியூசிலாந்து டாஸ் வென்றால் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்திருப்பார் என்று உறுதிப்படுத்திய லாதம் “கான்பூரில் நாங்கள் பந்து வீசிய விதம் நன்றாக இருந்தது, அது இங்கேயும் ஸ்விங் செய்யும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil sports virat kohlis controversial dismissal in mumbai test

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express