scorecardresearch

புதிய கோச் பொறுப்பேற்ற பிறகு அசத்தும் தமிழ் தலைவாஸ்: அடுத்தடுத்து 2 வெற்றி

புதிய பயிற்சியாளரின் வருகைக்கு பிறகு அடுத்தடுத்து 2 வெற்றியை ருசித்துள்ளது தமிழ் தலைவாஸ் அணி.

புதிய கோச் பொறுப்பேற்ற பிறகு அசத்தும் தமிழ் தலைவாஸ்: அடுத்தடுத்து 2 வெற்றி
Pro Kabaddi League 2022:  Ashan Kumar replaces Udhay Kumar as coach for Tamil Thalaivas; TT register Second Straight Victory Tamil News

Pro Kabaddi League 2022 – Tamil Thalaivas Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7 ஆம் தேதி முதல் தொடங்கியது. டிசம்பர் மாத இறுதிவரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னையை மையாக கொண்டு உதயமாகியுள்ள தமிழ் தலைவாஸ் அணி களமாடி வருகிறது.

பவன் ஷெராவத் காயம்

தமிழ் தலைவாஸ் அணியின் முன்னணி வீரரும், கேப்டனுமான பவன் ஷெராவத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் காயம் ஏற்பட்டது. பவன் குஜராத் வீரரை பிடிக்க முயன்றபோது அவரது வலது முழங்கால் அப்படியே மடங்கியது. இந்த பலத்த காயத்தால் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்றனர். இந்த சம்பவம் போட்டியைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. மேலும் தமிழ் தலைவாஸ் அணியினர் அப்படியே உறைந்தனர்.

‘அவர் தேசத்தின் சொத்து..!’ பவன் ஷெராவத் காயம் பற்றி பயிற்சியாளர் உதயகுமார் கூறுவது என்ன?

பவன் ஷெராவத்தின் காயம் குறித்து பேசிய தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் ஜெ உதயகுமார், பவன் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் களமாடுவார் என்றும், அணியின் வீரர்களுடன் தொடர்பில் இருக்கிறார் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் அவர்களை ஊக்குவிக்கிறார்.” என்று கூறி நம்பிக்கை தெரிவித்தார்.

பயிற்சியாளர் உதயகுமார் திடீர் விலகல்

இந்நிலையில், கடந்த வாரத்தில் தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெ உதயகுமார் திடீரென விலகினார். அவரது விலகல் அணிக்கு மற்றொரு பின்னடைவாக பார்க்கப்பட்டது. பயிற்சியாளர் உதயகுமாருக்கு பதிலாக புதிய தலைமை பயிற்சியாளராக அஷன் குமார் பொறுப்பேற்றார்.

இது தொடர்பாக தமிழ் தலைவாஸ் நிர்வாகம், “எங்கள் புதிய தலைமை பயிற்சியாளர் அஷன் குமாருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுப்போம். உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பல வருட அனுபவத்துடன், அவரது இந்தப் புதிய பயணத்தில், தமிழ் தலைவாஸ் அணியை அவர் பெரிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்று தெரிவித்தது.

அடுத்தடுத்து 2 வெற்றியை ருசித்த தமிழ் தலைவாஸ்

இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணி அதன் புதிய பயிற்சியாளரின் வருகைக்கு பிறகு அடுத்தடுத்து 2 வெற்றியை ருசித்துள்ளது.

கடந்த 28 ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் 38-27 என்ற புள்ளிக்கணக்கில் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அணி, நேற்று புனேவில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தபாங் டெல்லி அணியை 49-39 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி மிரட்டியுள்ளது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி அதன் 3-வது வெற்றியை தற்போது பதிவு செய்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக தமிழ் தலைவாஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் அஷன் குமார் உள்ளார். அவரது வருகைக்கு பிறகு தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து 2 வெற்றியை பெற்றுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Tamil thalaivas register second straight victory tamil news