Tamil Thalaivas vs Bengaluru Bulls PKL : புரோ கபடி தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் (அக்.7) சென்னையில் தொடங்கியது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் வீழ்த்தி இருந்தாலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் யு.பி.யோத்தா, தெலுகு டைட்டன்ஸ் அணி மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளிடம் தமிழ் தலைவாஸ் தோற்றது.
இந்நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் மீண்டும் பெங்களூரு புல்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியின் லைவ் அப்டேட்ஸ்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் நீங்கள் உடனுக்குடன் காணலாம்.
Tamil Thalaivas vs Bengaluru Bulls , PKL 2018 Kabaddi Match Live Score Updates: தமிழ் தலைவாஸ் – பெங்களூரு புல்ஸ் அணி போட்டி லைவ்
09:00 PM: இறுதியில் 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றிப் பெற்றது.
08:53 PM: பெங்களூரு அணியின் பவன் ஷெராவத் 15 ரெய்டு புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணியின் அஜய் தாகுர் 9 புள்ளிகளும் எடுத்துள்ளனர். தற்போது 42-32 என்று பெங்களூரு புல்ஸ் அணி முன்னிலையில் உள்ளது.
08:46 PM: மீண்டும் பெங்களூரு புல்ஸ் ஆட்டத்தில் தலை தூக்குகிறது. டைம் இல்ல தமிழ் தலைவாஸ். சீக்கிரம் கதைய முடிங்க. 37-28 என பெங்களூரு முன்னிலையில் உள்ளது.
08: 40 PM: இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியுள்ளது. கமான் தமிழ் தலைவாஸ்
08: 35 PM: முதல் பாதியின் முடிவில் 30-24 என பெங்களூரு புல்ஸ் முன்னிலையில் உள்ளது. தமிழ் தலைவாஸ் கடந்த 15 நிமிடங்களாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 24-10 என்ற நிலையில் இருந்து 30-24 வரை வந்துள்ளனர். இன்னும் கொஞ்சம் எஃபோர்ட் போட்டால் தமிழ் தலைவாஸ் வெற்றிக் கொடி நாட்ட முடியும்.
08:28 PM: தமிழ் தலைவாஸ் வீரர்கள் ரெய்டுகள் மூலம் புள்ளிகளை திரட்டி வருகின்றனர். விட்டுப் பிடிப்பதென்ன தமிழ் தலைவாசின் ஸ்டிராடஜியா என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் ஆட்டத்தை மொத்தமாக விட்டுவிட்டு பின்னால் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கேப்டன் அஜய் தாகுர் 8 ரெய்டு புள்ளிகளை பெற்றுள்ளார். தற்போது 30 - 23
08:20 PM: தமிழ் தலைவாஸ் அணியின் டேக்கில் மிகவும் மோசமாக உள்ளது. முதல் பாதி அநேகமாக தமிழ் தலைவாஸ் அணியின் கையைவிட்டு போய்விட்டதாகவே தெரிகிறது. தற்போது 24-11
08: 16 PM: ஆட்டம் தொடங்கி கால் மணி நேரம் தான் ஆகிறது. ஆனால், அதற்குள் பெங்களூரு அணி 20 புள்ளிகளை சம்பாதித்துள்ளது. ரெய்டில் மட்டும் அந்த அணி 13 புள்ளிகளை பெற்றுள்ளது. டேக்கிளில் 7 புள்ளிகள்.
08: 10 PM: தமிழ் தலைவாஸ் அணியின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியிருக்கும் நிலையில், மீண்டும் தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுமோ என அஞ்சத் தோன்றுகிறது. ஏனெனில், 10-3 என பெங்களூரு புல்ஸ் லீடிங்.
08:05 PM: ஆரம்பம் முதலே பெங்களூரு புல்ஸ் முன்னிலை வகிக்கிறது.