தோல்வியுடன் வெளியேறிய தமிழ் தலைவாஸ்

அடுத்த சீசனில், தமிழ் தலைவாஸ் அணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ரேஸில் ஓடாத ஹீரோ குதிரைகளுக்கும் அடுத்த சீசனில் விடை கொடுக்கப்படும் என தெரிகிறது

tamil thalaivas vs bengal warriors pro kabaddi league 2019 - இதயத்தின் கடைசித் துளி எதிர்பார்ப்பு - இன்று நிறைவேற்றுமா தமிழ் தலைவாஸ்?
tamil thalaivas vs bengal warriors pro kabaddi league 2019 – இதயத்தின் கடைசித் துளி எதிர்பார்ப்பு – இன்று நிறைவேற்றுமா தமிழ் தலைவாஸ்?

புரோ கபடி லீக் 2019 தொடரில், இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

நடப்பு தொடரில், தமிழ் தலைவாஸ் குறித்து நிறைய பேசிவிட்டோம். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தவிர, தெலுகு டைட்டன்ஸ், குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன்ஸ், பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் ஆகிய அணிகள் தொடரை விட்டு வெளியேறிவிட்டன.

அதேசமயம், டெல்லி தபாங், பெங்கால் வாரியர்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், யு.பி.யோத்தா, யு மும்பா, பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

அடுத்த சீசனில், அணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ரேஸில் ஓடாத ஹீரோ குதிரைகளுக்கும் அடுத்த சீசனில் விடை கொடுக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில், நொய்டாவில் புதன்கிழமை ஷாஹித் விஜய் சிங் பதிக் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் களம் மோதியது. இதில் தமிழ் தலைவாஸ் அணியை பெங்கால் வாரியர்ஸ் அணி 29-க்கு 33 புள்ளிகள் என்ற கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்த தொடரில் இருந்து தமிழ் தலைவாஅஸ் அணி தோல்வியுடன் வெளியேறியது.

நடப்பு சீசனில், கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு, முதல் வெற்றியை கடந்த பிங்க் பேந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தான் தலைவாஸ் ருசித்தது. அதேபோல், இன்றைய கடைசி ஆட்டத்திலும் வெற்றிப் பெற்று, குறைந்தபட்சம் கடைசி இடத்தையாவது தலைவாஸ் தவிர்க்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கடைசிப் போட்டியில் தோல்வியுடன் வெளியேறியது தமிழ் தலைவாஸ் அணி.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil thalaivas vs bengal warriors pro kabaddi league

Next Story
ஜாகீர் கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘டியூட் சொசைட்டி’ பாஸ் பாண்ட்யா!hardik pandya wishes zaheer khan birthday - ஜாகீர் கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து - விமர்சிக்கப்படும் 'டியூட் சொசைட்டி' பாஸ் பாண்ட்யா!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express