Advertisment

நரேந்தர், அஜிங்கியா சிறப்பான ஆட்டம்; தமிழ் தலைவாஸ் அபார வெற்றி

புரோ கபடி தொடரில் ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோத உள்ளன.

author-image
WebDesk
New Update
Tamil Thalaivas vs Bengaluru Bulls and Gujarat Giants vs Puneri Paltan PKL Season 10 match updates in Tamil

புரோ கபடி லீக் 2023 -24: தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் -  புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன. 

பெங்களூரு புல்ஸ் vs தமிழ் தலைவாஸ்

இன்றைய போட்டியில் தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. தமிழ் தலைவாஸ் அணியில் நரேந்தர் மற்றும் அஜிங்கியா பவார் ரைடுகள் மூலம் புள்ளிகளை குவித்தனர். பெங்களூரு அணி தமிழ் தலைவாஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 17 புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

தமிழ் தலைவாஸ் அணி 45 புள்ளிகளைப் பெற்றது. பெங்களூரு புல்ஸ் அணி 28 புள்ளிகளை மட்டுமே பெற்றது. தமிழ் தலைவாஸ் அணியில் அதிகபட்சமாக நரேந்தர் 14 புள்ளிகளையும், அஜிங்கியா 11 புள்ளிகளையும் பெற்றனர். பெங்களூரு புல்ஸ் அணியில் அதிகபட்சமாக அக்‌ஷித் 11 புள்ளிகளை எடுத்தார். 

நடப்பு சீசனில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 4ல் வெற்றி 9ல் தோல்வி என 25 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஜனவரி 16 அன்று நடந்த தனது கடைசி ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை 41-25 என்ற கணக்கில் வீழ்த்தி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது. 

மறுபுறம், இதுவரை 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூரு புல்ஸ் அணி 6ல் வெற்றியும், 8ல் தோல்வியும் அடைந்து 37 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஜனவரி 19 அன்று தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 42-26 என்ற கணக்கில் வென்றது. இரு அணிகளும் வெற்றி பெற்ற உத்வேகத்தில் களமிறங்குவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

நேருக்கு நேர் 

பி.கே.எல் வரலாற்றில் பெங்களூரு புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் 13 முறை மோதியுள்ளன.

தமிழ் தலைவாஸுக்கு எதிரான 11 வெற்றிகளுடன், பெங்களூரு புல்ஸ் அணிகள் இந்த அணிகளுக்கு இடையிலான நேருக்கு நேர் சாதனையில் முன்னிலையில் உள்ளன. தமிழ் தலைவாஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூரு புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையேயான முந்தைய போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி 38-37 என த்ரில் வெற்றி பெற்றனர். அதற்கு பதிலடி கொடுக்க தமிழ் தலைவாஸ் அணி இன்று வரிந்து கட்டும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment