Tamil Thalaivas vs Bengaluru Bulls: புரோ கபடி தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் (அக்.7) சென்னையில் தொடங்கியது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் வீழ்த்தி இருந்தாலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் யு.பி.யோத்தா மற்றும் தெலுகு டைட்டன்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் தோற்றது.
இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியின் லைவ் அப்டேட்ஸ்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் நீங்கள் உடனுக்குடன் காணலாம்.
Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE Kabaddi Score, Pro Kabaddi League 2018 Season 6 Kabaddi Match Live Updates: தமிழ் தலைவாஸ் – பெங்களூரு புல்ஸ் அணி போட்டி லைவ்:
10:25 PM: 37-48 என்ற கோல் கணக்கில் வென்றது பெங்களூரு புல்ஸ். தமிழ் தலைவாஸ் அணியின் மூன்றாவது தொடர் தோல்வி இதுவாகும். ஒரே ஆறுதல், தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாகுர் 19 ரெய்டு புள்ளிகளை பெற்றது தான்.
/tamil-ie/media/media_files/uploads/2018/10/D446-300x217.jpg)
10:20 PM: 32-45 என பெங்களூரு புல்ஸ் லீடிங்.
10:15 PM: கடைசி நேரத்தில் முட்டி மோதுவதே தமிழ் தலைவாஸ் அணிக்கு வேலையாப் போச்சு!. இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாசின் ஆட்டம் ஓகே என்று சொல்லலாம். பட்! இட்ஸ் டூ லேட்!.
10:10 PM: பவன் ஷெராவத் இதுவரை கைப்பற்றிய மொத்த புள்ளிகளின் எண்ணிக்கை 19. ஒரு தனி மனிதனிடம் சரிந்துள்ளது தமிழ் தலைவாஸ்.
10:00 PM: பவன் ஷெராவத் ஒரே ரெய்டில் ஐந்து புள்ளிகளை அள்ளியது தான் ஆட்டத்தின் போக்கை தமிழ் தலைவாசிடம் இருந்து மாற்றியது.
09:55 PM: இந்த ஆட்டத்தில் சுத்தமாக தமிழ் தலைவாஸ் நம்பிக்கையை இழந்துவிட்டது எனலாம். டேக்கில், ரெய்டு என அனைத்திலும் தரைமட்டமானது தலைவாஸ் அணி. 14-33 என லீடிங்கில் உள்ளது பெங்களூரு புல்ஸ் அணி.
09:45 PM: பெங்களூரு புல்ஸ் வீரர் பவன் ஷெராவத் முதல் பாதி முடிவதற்குள்ளே 17 ரெய்டு புள்ளிகளை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார். 12-28 என்று மிகப்பெரிய லீடிங்கில் உள்ளது பெங்களூரு புல்ஸ் அணி.
09:40 PM: இரு அணிகளும் சமபலத்துடன் ஆடி வருகின்றன. ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கபடியில் மன கம்யூனிகேஷன் என்பது மிக மிக அவசியம். ஒருவருக்கொருவர் நல்ல புரிதலில் இருக்க வேண்டும். கடந்த இரு ஆட்டங்களிலும் தமிழ் தலைவாஸ் அணியில் அது மிஸ் ஆகிறதோ என்று தோன்றுகிறது. 11-15 என்று பெங்களூரு புல்ஸ் முன்னிலையில் உள்ளது.
09:26 PM: இந்த ஆட்டத்திலும் தமிழ் தலைவாஸ் டேக்கில் கொஞ்சம் ஜெர்க் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். பெங்களூரு புல்ஸ் அணியே முன்னிலையில் உள்ளது.
09:18 PM: இரு அணி வீரர்களும் களத்திற்கு வந்தனர். ஆட்டம் தொடங்கியது. தமிழ் தலைவாஸ் ஜெயிக்க வேண்டிய ஆட்டம் இது. பீ கேர்ஃபுல் பாய்ஸ்!