VIVO Pro Kabaddi League 2019: மூன்றாவது வெற்றி, மூன்றாவது இடம் - தோல்வியில் இருந்து மீண்டெழுந்த தமிழ் தலைவாஸ்!

அஹ்மதாபாத்தின் EKA Arena விளையாட்டு அரங்கில் தமிழ் தலைவாஸ் vs குஜராத் ஃபார்ச்யூன் ஜெயண்ட்ஸ் மோதும் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது

அஹ்மதாபாத்தின் EKA Arena விளையாட்டு அரங்கில் தமிழ் தலைவாஸ் vs குஜராத் ஃபார்ச்யூன் ஜெயண்ட்ஸ் மோதும் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil thalaivas vs gujarat fortune giants pro kabaddi league when and where to watch - மூன்றாவது வெற்றியை நோக்கி தமிழ் தலைவாஸ்!

Tamil thalaivas vs gujarat fortune giants pro kabaddi league when and where to watch - மூன்றாவது வெற்றியை நோக்கி தமிழ் தலைவாஸ்!

Tamil Thalaivas vs Gujarat Fortunegiants Match 2019: புரோ கபடி லீக் தொடரில் இன்று(ஆக.10) குஜராத் ஃபார்ச்யூன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி, 34-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்றது.

Advertisment

புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி முதல் போட்டியில் வெற்றிப் பெற்றாலும், தபாங் டெல்லி கேசி மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகளிடம் தோற்றது. பிறகு ஹரியானா அணிக்கு எதிராக 34-28 என கம் பேக் கொடுத்த தமிழ் தலைவாஸ், யுபி யோத்தா அணிக்கு எதிராக டிரா செய்தது. இதனால், புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. இந்நிலையில், இன்று மூன்றாவது வெற்றியை நோக்கி தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது.

இதில், ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் முன்னிலை பெறத் தொடங்கியது. முதல் பாதியின் முடிவிலேயே, குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதனால், முதல் பாதியில் 10-15 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் முன்னிலை பெற்றது. தொடர்ந்து, இரண்டாம் பாதியிலும் தலைவாஸின் ஆதிக்கம் தொடர்ந்தது.

DO OR DIE ரெய்டுகளில் கூட குஜராத் கோட்டை விட்டது. தமிழ் தலைவாஸும் அதில் சொதப்பியது. ஆனால்,  தலைவாஸ் டேக்கிளில், குஜராத் அணியை விட சிறப்பாக செயல்பட்டதால், வெற்றி வசமானது.

Advertisment
Advertisements

இரண்டாம் பாதியில், ஒருக்கட்டத்தில் 26-26 என குஜராத் டஃப் கொடுத்தாலும், அதற்கு பிறகு மீண்டும் விழித்துக் கொண்ட தலைவாஸ் 34-28 என வெற்றியை உறுதி செய்தது.

இப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் மோஹித் சில்லார், குஜராத் அணியின் சோனுவின் ரெய்டை டேக்கில் செய்த போது, புரோ கபடி லீக் தொடரில் 500 டேக்கில் புள்ளிகள் பெற்ற வீரர் என்ற சிறப்பைப் பெற்றார்.

6 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ், 3 வெற்றி, 2 தோல்வி, 1 டிரா என 20 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.

Pro Kabaddi League

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: