Tamil Thalaivas vs Gujarat Fortunegiants PKL : புரோ கபடி தொடரில் இன்று நடிபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில், 6வது முறையாக தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்தது.
புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் (அக்.7) சென்னையில் தொடங்கியது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் வீழ்த்தி இருந்தாலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் யு.பி.யோத்தா, தெலுகு டைட்டன்ஸ் அணி மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளிடம் தமிழ் தலைவாஸ் தோற்றது.
அதன்பிறகு, கடந்த 23ம் தேதி நடந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியை 36-31 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், இன்று குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ் அணியுடன் தமிழ் தலைவாஸ் மோதியது.
இந்தப் போட்டியின் லைவ் அப்டேட்ஸ்,
Tamil Thalaivas vs Gujarat Fortunegiants : தமிழ் தலைவாஸ் – குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ்
10:15 PM: அஜய் தாக்கூர் அண்ணே.. போங்கண்ணே... 36-25 என குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ் அணி வெற்றிப் பெற்றுள்ளது. இத்தொடரில், தமிழ் தலைவாஸ் அணியின் 6வது தோல்வி இதுவாகும்.
10:00 PM: ரெய்டுகளில் தமிழ் தலைவாஸ் சொதப்புகிறது என்று சொல்வதைவிட, குஜராத் வீரர்கள் அபாரமாக டேக்கில் செய்து வருகின்றனர் என்று சொல்லலாம். 32-20 என குஜராத் ஜெயன்ட்ஸ் முன்னிலையில் உள்ளது.
09:55 PM: என்னாச்சு தமிழ் தலைவாசுக்கு? இரண்டாம் பாதி தொடங்கியவுடன் ஒரு ஆல் அவுட். 28-18 என குஜராத் லீடிங்கில் உள்ளது. கேப்டன் அஜய் தாக்கூரிடமே தடுமாற்றம் தெரிகிறது.
09:50 PM: இரண்டாம் பாதி தொடங்கியது முதல், குஜராத் அணியின் ஆட்டம் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறது. விறுவிறு வென லீடிங்கில் சென்றுக் கொண்டிருக்கிறது. 15-21 என குஜராத் முன்னிலை.
09:40 PM: முதல் பாதியின் முடிவில் 16-14 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் முன்னிலை பெற்றுள்ளது. கொஞ்சம் அவசர குடுக்குத் தனம் இருந்ததால், டேக்கிளில் சில புள்ளிகளை தமிழ் தலைவாஸ் இழந்தது. அதேசமயம், குஜராத் அணியின் டேக்கிலை கம்பேரிட்டிவ்லி பெஸ்ட் எனலாம்.
09:30 PM: தமிழ் தலைவாசின் ரெய்ட், டேக்கில் என இரண்டுமே சரிசம அளவில் உள்ளது. அதிலும் மன்ஜீத் சில்லரின் டேக்கில் வாவ் ரகம். தனி ஆளாக, அலேக்காக ரெய்டரை அமுக்கிய விதம் வேற லெவல். அதேசமயம், குஜராத் அணியின் டேக்கிலும் சூப்பர்ப். தற்போது, 13-13 என ஆட்டம் சமநிலையில் உள்ளது.
09:20 PM: தமிழ் தலைவாஸ் புனே அணியை வீழ்த்தி கடந்த ஆட்டத்தில் வெற்றிப் பெற்றிருப்பதால், செம கான்ஃபிடன்ட்டோடு தமிழ் தலைவாஸ் இன்று களமிறங்கியது. அதற்கு ஏற்றார் போல, 8-6 என தமிழ் தலைவாஸ் தற்போது லீடிங்கில் உள்ளது.