Haryana Steelers vs Tamil Thalaivas Today PKL Match Tamil News: 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 12 அணிகள் களமாடும் இந்த தொடர் கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், இன்றைய 12வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் பெங்களூருவில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தமிழ் தலைவாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ்; யார் பலம் எப்படி?
ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி அதன் முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை 41-33 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதனால் 5 5 புள்ளிகளைப் பெற்றுள்ள அந்த அணி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் ரைடர் மஞ்சீத் தஹியா மற்றும் ஆல்-ரவுண்டர் நிதின் ராவல் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.
மேலும், ஹரியானா அணியில் கேப்டன் ஜோகிந்தர் நர்வால், ஜெய்தீப் மற்றும் மோஹித் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். தொடக்க ஆட்டத்தில் 19 புள்ளிகளைப் பெற்ற மன்ஜீத், அந்த அணியில் நட்சத்திர வீரராக வலம் வருகிறார்.
மறுபுறம், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் தொடக்க ஆட்டத்தில் மோதிய தமிழ் தலைவாஸ் அணி 31 -31 என்ற புள்ளிக்கணக்கில் சமன் செய்தது. இந்த ஆட்டத்தில் அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான பவன் செஹ்ராவத் முதல் 10 நிமிடத்திலே காயாமடைந்து வெளியேறினார். எனினும், அந்த அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டி சமன் செய்தார்கள்.
முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்ட பவன் செஹ்ராவத் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இதனால், அவர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பில்லை. அவரது காயம் இன்னும் 2 - 3 நாட்களில் சரியாகி விடும் என்று தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் உதய குமார் தெரிவித்துள்ளார்.
முதல் வெற்றிக்கான தேடலில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி அதைப் பதிவு செய்த இன்றைய ஆட்டத்தில் தீவிரம் காட்டும். அதேவேளையில், ஹரியானா அணி தொடர் வெற்றியைக் குவிக்க முனைப்பு காட்டும். இதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
ஹரியானா ஸ்டீலர்ஸ் vs தமிழ் தலைவாஸ், பிகேஎல் 2022, போட்டி விவரங்கள்
போட்டி: ஹரியானா ஸ்டீலர்ஸ் vs தமிழ் தலைவாஸ், புரோ கபடி 2022, போட்டி 12.
தேதி - நேரம்: செவ்வாய், அக்டோபர் 11; மாலை 7.30 மணி IST.
இடம்: ஸ்ரீ காந்தீரவா உள்விளையாட்டு அரங்கம், பெங்களூரு.
இரு அணி வீரர்கள் பட்டியல்
ஹரியானா ஸ்டீலர்ஸ்:
வினய், மீடூ, ஜெய்தீப், அங்கித், மோஹித், மோனு, ஹர்ஷ், நவீன், சன்னி, மன்ஜீத், நிதின் ராவல், அமீர்ஹோசைன் பஸ்தாமி, முகமது மக்சௌட்லோ, சுஷில், கே பிரபஞ்சன், மனிஷ் குலியா, லவ்பிரீத் சிங், ஜோகிந்தர் சிங் நர்வால், மற்றும் ராகேஷ் நர்வால் .
தமிழ் தலைவாஸ்:
சாகர், அஜிங்க்யா அசோக் பவார், அபிஷேக் எம், ஹிமான்ஷு, ஹிமான்ஷு சிங், மோஹித், ஆஷிஷ், சாஹில், ஜதின், நரேந்தர், பவன் செஹ்ராவத், தனுஷன் லக்ஷ்மமோகன், எம்டி. ஆரிப் ரப்பானி, விஸ்வநாத் வி, அர்பித் சரோஹா, கே அபிமன்யு, மற்றும் அன்கித்.
இரு அணிகளின் உத்தேச செவன்
ஹரியானா ஸ்டீலர்ஸ்:
அங்கித், மோஹித், ஜோகிந்தர் நர்வால், ராகேஷ் நர்வால், மன்ஜீத், லவ்ப்ரீத் சிங் மற்றும் நிதின் ராவா.
தமிழ் தலைவாஸ்:
ஆஷிஷ், அஜிங்க்யா பவார், விஸ்வநாத் வி, சாகர், ஹிமான்ஷு, மோஹித் மற்றும் எம் அபிஷேக்.
ஹரியானா ஸ்டீலர்ஸ் vs தமிழ் தலைவாஸ் நேரடி ஒளிபரப்பு விவரங்கள், சேனல் பட்டியல்
டிவி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ்,
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil