Advertisment

கடைசி வரை பரபரப்பு... 1 புள்ளி வித்தியாசத்தில் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்

சென்னையில் உள்ள எஸ்.டி.ஏ.டி மல்டி பர்போஸ் இன்டோர் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன.

author-image
WebDesk
New Update
Tamil Thalaivas vs Jaipur Pink Panthers Gujarat Giants vs UP Yoddhas  PKL Season 10 match updates in tamil

புரோ கபடி லீக் 2023: தமிழ் தலைவாஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்; குஜராத் ஜெயண்ட்ஸ் vs உ.பி. யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League | Tamil Thalaivas 2023: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

Advertisment

இந்நிலையில், புரோ கபடி லீக் தொடரில், 4-வது சுற்று போட்டிகள் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 27ம் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

இந்நிலையில், இந்த தொடரில் சென்னையில் உள்ள எஸ்.டி.ஏ.டி மல்டி பர்போஸ் இன்டோர் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 24-25 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டது. 

தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் நார்வால் 8 புள்ளிகளையும், அபிஷேக் 4 புள்ளிகளையம் பெற்றனர். ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி தரப்பில், தேஷ்வால் 7 புள்ளிகளும், மிர்பாஹிரி 5 புள்ளிகளையும் எடுத்தனர். இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 4 தோல்விகளுடன், 11 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. மறுபுறம், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 7 ஆட்டங்களில் 4ல் வெற்றி, 2ல் தோல்வி, 1ல் டை என 25 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. 

இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கிய மற்றொரு லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதியது. இதில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 38-30 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தியது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment