/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-25T123126.055.jpg)
Pro Kabaddi League 2022-23: Jaipur Pink Panthers vs Tamil Thalaivas match updates Tamil News
Tamil Thalaivas vs Jaipur Pink Panthers, PKL 9 match updates in tamil: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன. இந்த லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
இந்நிலையில், புரோ கபடி லீக்கில் ஐதராபாத்தில் நேற்று இரவு 8:30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 41-26 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
𝐁𝐚𝐭𝐭𝐥𝐞 𝟐 - Jaipur Pink Panthers ⚔️ Tamil Thalaivas 🔛📺 pic.twitter.com/vnno64NxwG
— ProKabaddi (@ProKabaddi) November 25, 2022
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி இதுவரை நடந்த 16 போட்டிகளில் 10ல் வெற்றி 6ல் தோல்வி என்று 54 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணி அதன் சமீபத்திய ஆட்டங்களில் தபாங் டெல்லி, யு மும்பா மற்றும் உபி யோதாஸ் அணிகளை வீழ்த்தி தொடர் வெற்றிகளை ருசித்துள்ளது. அதேஉத்வேகத்தில் அந்த அணி இன்றைய ஆட்டத்திலும் களமாடும். ஜெய்ப்பூர் அணியின் அர்ஜுன் தேஷ்வால் தனது அச்சத்தல் ரைடு மூலம் மிரட்டி வருகிறார்.
The final result may not have been as expected, but the fight put up by the #PantherSquad was commendable! 🤩 #JPPvPUN#FantasticPanga#JaiHanuman#TopCats#JaipurPinkPanthers#JPP#Jaipur#vivoProKabaddipic.twitter.com/jDAFyZ613k
— Jaipur Pink Panthers (@JaipurPanthers) November 24, 2022
மறுபுறம், தமிழ் தலைவாஸ் அணி இதுவரை நடந்த 16 போட்டிகளில் 7ல் வெற்றி 6ல் தோல்வி என்று 48 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேற தீவிரம் காட்டி வரும் அந்த அணி அதன் சமீபத்திய ஆட்டங்களில், 35-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியையும், 34-20 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியையும் வீழ்த்தி அசத்தியது. இந்த தொடர் வெற்றிகளால் உற்சாகமடைந்துள்ள தமிழ் தலைவாஸ் இன்றைய ஆட்டத்திலும் அதே வேகத்தில் களமாடுவார்கள். இந்த இரண்டு ஆட்டங்களிலும் தமிழ் தலைவாஸ் அணியின் நரேந்தர் ஹோஷியார் முக்கிய பங்கு வகித்தார். அவரின் ஃபார்ம் இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
From the match that saw us dominate from the get-go!#MUMvCHE | #IdhuNammaTeam | #GiveItAllMachipic.twitter.com/xP9iSWUzY2
— Tamil Thalaivas (@tamilthalaivas) November 23, 2022
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அதன் தொடர் வெற்றிகளால் மிரட்டி வருகிறது. இன்றைய ஆட்டத்திலும் அதன் ஆதிக்கத்தை தொடரவே நினைக்கும். இதனை தமிழ் தலைவாஸ் அணி சமாளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
முன்னதாக இவ்விரு அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 38 - 27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.