இரண்டு புள்ளிகளில் தமிழ் தலைவாஸ் தோல்வி! ரசிகர்கள் ஏமாற்றம்

டேக்கிளில் இதுவரை 164 அட்டெம்ப்ட் செய்திருக்கும் தமிழ் தலைவாஸ் அதில் 81 வெற்றியும், 83ல் தோல்வியும் பெற்றிருக்கிறது

tamil thalaivas vs jaipur pink panthers pro kabaddi 2019
tamil thalaivas vs jaipur pink panthers pro kabaddi 2019

Tamil Thalaivas vs Jaipur Pink Panthers Match 2019: புரோ கபடி லீக் 2019 தொடரில், தமிழ் தலைவாஸ் அணி ஏன் இவ்வளவு தடுமாறுகிறது என்பதே விளங்கவில்லை. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு மிக வலிமையான அணி இம்முறை களமிறங்கி இருக்கிறது. கேப்டன் அஜய் தாகூர், ராகுல் சௌத்ரி, மன்ஜீத் சில்லர் உள்ளிட்ட பல திறமைசாலிகளை களமிறக்கியும் தடுமாறுகிறது. எட்டு போட்டிகளில் ஆடிய தலைவாஸ் 3 வெற்றி, 3 தோல்வி, 2 டிரா செய்து 23 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் உள்ளது.

நடப்பு சீசனில் இதுவரை மொத்தமாக 327 ரெய்டுகளை அட்டெம்ப்ட் செய்துள்ள தலைவாஸ் அதில், 98 ரெய்டை சக்சஸ் செய்துள்ளது. 78 தோல்வி ரெய்டுகள், 151 எம்ப்டி ரெய்டுகள்.

டேக்கிளில் இதுவரை 164 அட்டெம்ப்ட் செய்திருக்கும் தலைவாஸ் அதில் 81 வெற்றியும், 83ல் தோல்வியும் பெற்றிருக்கிறது.

Tamil Thalaivas vs Jaipur Pink Panthers

உண்மையில் எதிர்பார்த்த அளவுக்கு தலைவாஸ் அணியின் செயல்பாடு இல்லை என்பதே உண்மை. இந்நிலையில், இன்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்கொண்ட தமிழ் தலைவாஸ் 28-26  என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியுற்றது.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil thalaivas vs jaipur pink panthers pro kabaddi 2019 when and where to watch

Next Story
ஐரோப்பியன் அப்பர் கட்…. சூசைட் டைவ் அட்டாக்! – WWE போட்டியில் ரோலின்ஸ் மாஸ் மிரட்டல்WWE Seth Rollins and Braun Strowman become new Tag Team Champions
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com