புரோ கபடி லிீக்: புனேரி பல்டனை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி!

புரோ கபடி லீக் தொடரில் இன்று (அக். 23) இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது.

புரோ கபடி லீக் தொடரில் இன்று (அக். 23) இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Thalaivas vs Puneri Paltan PKL 11 match 11 Results in tamil

புரோ கபடி லீக் 2024: தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்டான்

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். 

Advertisment

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் இன்று (அக். 23) இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பல்டன் அணிகள் மோதியது. 

இந்த ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் என இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனர். ஆட்ட நேர முடிவில், தமிழ் தலைவாஸ் அணி 35 - 30 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Advertisment
Advertisements

தமிழ் தலைவாஸ் அணி 17 ரைடு புள்ளிகள், 13 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி என 35 புள்ளிகளைப் பெற்றது. புனேரி பல்டன் அணி, 17 ரைடு புள்ளிகள், 13 டேக்கிள் புள்ளிகள் மட்டும் எடுத்து தோல்வியைத் தழுவியது.   

இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 44-29 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய உற்சாகத்துடன் தமிழ் தலைவாஸ் இன்றைய போட்டியில் களமாடும். அதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த வெற்றிக்கு குறி வைக்கும். ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போடவே நடப்பு சாம்பியான புனேரி பால்டன் நினைக்கும். அந்த அணியும் அதன் முந்தைய ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் 40-25 என வீழ்த்தி உத்த்வேகத்துடன் களமாடுகிறது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

நேருக்கு நேர் 

புரோ கபடி லீக் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் புனேரி பால்டன் 6 முறையும், தமிழ் தலைவாஸ் 3 முறையும் வென்றுள்ளன. 2 போட்டிகள் டிராவில் முடிந்தது. 

முன்னதாக தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்டன் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடப்பு சாம்பியனான புனேரி பல்டன்  56-29 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League Tamil Thalaivas Pro Kabaddi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: