/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1652.jpg)
Tamil thalaivas vs puneri Paltan pro kabaddi 2019
Tamil Thalaivas vs Puneri Paltan Match 2019: புரோ கபடி லீக் 2019 தொடரில், இன்று தமிழ் தலைவாஸ் அணி புனேரி பால்டன் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி முதல் போட்டியில் வெற்றிப் பெற்றாலும், தபாங் டெல்லி கேசி மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகளிடம் தோற்றது. பிறகு ஹரியானா அணிக்கு எதிராக 34-28 என கம் பேக் கொடுத்த தமிழ் தலைவாஸ், யுபி யோத்தா அணிக்கு எதிராக டிரா செய்தது. இதனால், புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. பிறகு, குஜராத் ஃபார்ச்யூன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 34-28 என்ற புள்ளிகள் கணக்கில் 3வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
ஆனால், நேற்று(ஆக.17) நடந்த ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணியிடம் 21-32 என்று செமத்தியாக அடி வாங்கியது தலைவாஸ். நிச்சயம் இது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
ஏனெனில், தொடரின் ஆரம்பத்தில் சற்று சறுக்கிய தமிழ் தலைவாஸ், அதன் பிறகு சிறப்பான கம் பேக் கொடுத்து ஆளுமை செய்து வந்தது. இதனால், பெங்களூரு புல்ஸ்க்கு எதிரான தோல்வி ஷாக் தான்.
இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் புனேரி பால்டன் அணியை தமிழ் தலைவாஸ் எதிர்கொண்டது. இப்போட்டி, 31-31 என டிராவில் முடிந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தலைவாஸ் அணி சார்பில் அதிகபட்சமாக அஜித்குமார் 8 ரெய்டு புள்ளிகளும், ராகுல் சௌத்ரி 8 ரெய்டு புள்ளிகளும், ரான் சிங் 4 டேக்கில் புள்ளிகளும் பெற்றனர்.
ஏற்கனவே, யுபி யோத்தா அணியுடனான ஆட்டமும் டிராவான நிலையில், இப்போட்டியும் டிராவானது. எட்டு போட்டிகளில் ஆடியுள்ள தமிழ் தலைவாஸ் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 23 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.