Advertisment

புரோ கபடி; கடும் நெருக்கடி கொடுத்த தெலுங்கு டைட்டன்ஸ்; தமிழ் தலைவாஸ் த்ரில் வெற்றி

நரேந்தர், ஷாகில் சிறப்பான ஆட்டம்; கடுமையான போட்டி கொடுத்த தெலுங்கு டைட்டன்ஸை 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழ் தலைவாஸ்

author-image
WebDesk
New Update
Tamil Thalaivas vs Telugu Titans and Bengaluru Bulls vs Jaipur Pink Panthers Pro Kabaddi League 10 Tamil News

பி.கே.எல் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் 12 முறை தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது

 Pro-kabaddi-league | tamil-thalaivas: 10-வது புரோ கபடி லீக் திருவிழா இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

Advertisment

இன்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் மாறி மாறி முன்னிலைப் பெற்றன. முதல் பாதியில் 20 – 17 என தமிழ் தலைவாஸ் முன்னிலைப் பெற்றது. பின்னர் தெலுங்கு டைட்டன்ஸ் சுதாரித்து கடும் நெருக்கடி கொடுத்தது. இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

தமிழ் தலைவாஸ் அணியில் அதிகபட்சமாக நரேந்தர் 10 புள்ளிகளையும், ஷாகில் 7 புள்ளிகளையும் பெற்றனர். தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் அதிகப்பட்சமாக பவன் ஷெராவத் மற்றும் ராபின் தலா 7 புள்ளிகளையும், சஞ்சீவி 6 புள்ளிகளையும் எடுத்தனர்.

நேற்றைய போட்டி முடிவு 

இந்த தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்கால் வாரியர்ஸ் 60-42 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்சை வீழ்த்தியது. 

இன்றைய போட்டி 

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து, இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன.

தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் 

டிசம்பர் 10 ஆம் தேதி பெங்கால் வாரியர்ஸுக்கு எதிரான 38-48 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது. இது புரோ கபடி லீக் சீசன் 10 இல் அவர்களின் முதல் தோல்வியாகும். அந்த தோல்விக்குப் பிறகு இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் களமாடுகிறது. 

மறுபுறம், தெலுங்கு டைட்டன்ஸ் டிசம்பர் 9 அன்று உ.பி யோதாஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் 33-48 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.

தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் நேருக்கு நேர் 

பி.கே.எல் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் 12 முறை தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கெதிரான 6 வெற்றிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலையில் உள்ளது. இந்த மோதலில் தெலுங்கு டைட்டன்ஸ் 5 முறை வென்றுள்ளது, ஒரு போட்டி டையில் முடிந்தது.

முன்னதாக தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் இடையேயான போட்டி தலைவாஸ் அணிக்கு சாதகமாக முடிந்தது. அவர்கள் சீசன் 9 இல் 52-24 என வென்றனர்.

1 வெற்றி மற்றும் 1 தோல்வியுடன், தமிழ் தலைவாஸ் 5 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது. அதேசமயம், தெலுங்கு டைட்டன்ஸ் 1 புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் 12 வது இடத்தில் உள்ளது. எனவே, பட்டியலில் தொடர்ந்து முன்னேற இன்றைய போட்டியில் இரு அணிகளும் தீவிரம் காட்டும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment