/indian-express-tamil/media/media_files/2025/08/26/tamil-thalaivas-vs-telugu-titans-head-to-head-records-stats-in-tamil-2025-08-26-19-25-51.jpg)
தெலுங்கு டைட்டன்ஸ் அணி புரோ கபடி லீக் தொடரில் அனைத்து சீசன்களிலும் ஆடிய இருக்கிறது. அதே நேரத்தில், தலைவாஸ் அணி 2017 ஆம் ஆண்டில் தான் அடியெடுத்து வைத்தது.
12-வது புரோ கபடி லீக் தொடர் வருகிற வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்-29) முதல் தொடங்கி நடைபெறுகிறது. 12 அணிகள் அணிகள் களமாடும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.இம்முறை போட்டிகள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது.
முதல் கட்ட லீக் ஆட்டங்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வருகிற வெள்ளிக்கிழமை முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடைபெறும் சூழலில், தொடக்கப் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில், புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இடையே சில பரபரப்பான ஆட்டங்கள் அரங்கேறியுள்ளது. இதில் இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
தெலுங்கு டைட்டன்ஸ் அணி புரோ கபடி லீக் தொடரில் அனைத்து சீசன்களிலும் ஆடிய இருக்கிறது. அதே நேரத்தில், தலைவாஸ் அணி 2017 ஆம் ஆண்டில் தான் அடியெடுத்து வைத்தது. இந்த இரு அணிகளுக்கு இடையில் உள்ள ஒரு முக்கிய ஒற்றுமை என்னவென்றால், இவ்விரு அணிகளுமே ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. தெலுங்கு டைட்டன்ஸ் சீசன் 2 மற்றும் சீசன் 4 இல் பிளேஆஃப்க்கு முன்னேறியது. மறுபுறம், தலைவாஸ் அணி ஒரு முறை மட்டுமே (சீசன் 9 இல்) பிளேஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.
நேருக்கு நேர்
இதற்கிடையில், புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இதுவரை 16 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தமிழ் தலைவாஸ் அணி 9 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதே நேரத்தில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 6 முறை மட்டுமே வென்றுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இதேபோல், இவ்விரு அணிகள் கடையாக மோதிய 5 ஆட்டங்களில் 4-ல் தமிழ் தலைவாஸ் அணியே வென்று அசத்தி இருக்கிறது. தோல்வியுற்ற அந்த ஒரு போட்டியில் (34 - 35) ஒரு புள்ளி வித்தியாசம் தான். அந்த அளவுக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக கையாண்டுள்ளது. எனவே, இந்த சீசனிலும் தரமான வெற்றியுடன் தமிழ் தலைவாஸ் அணி தொடரைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.