/indian-express-tamil/media/media_files/2025/09/19/tamil-thalaivas-vs-telugu-titans-match-updates-pro-kabaddi-league-12-pkl-12-match-42-jaipur-tamil-news-2025-09-19-17-13-04.jpg)
தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ், புரோ கபடி லீக் 12, பிகேஎல், போட்டி 42 ஜெய்ப்பூர்.
12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடரில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள்அரங்க மைதானத்தில் 42-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதியது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற புரோ கபடி லீக் ஆட்டத்தில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 43-29 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது, சீசன் தொடக்க ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக அமைந்தது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே, விஜய் மாலிக்கின் சிறப்பான ரைடுகள் மூலம் தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் 10 நிமிடங்களுக்குள் தமிழ் தலைவாஸ் அணியை 'ஆல் அவுட்' செய்து 13-4 என முன்னிலை பெற்றது. முதல் பாதி முடிவில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 22-10 என்ற வலுவான முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியில், தமிழ் தலைவாஸ் அணியின் அர்ஜுன் மற்றும் நரேந்தர் புள்ளிகளைப் பெற முயன்றபோதும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி தனது முன்னிலையை விட்டுக்கொடுக்கவில்லை. விஜய் மாலிக், பாரத் போன்ற வீரர்களின் ஆதிக்கத்தால், தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடர்ந்து முன்னிலை வகித்தது. இறுதியில், தமிழ் தலைவாஸ் அணியின் கடைசி கட்டப் போராட்டங்கள் பலனளிக்காததால், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 14 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
\அர்ஜுன் தேஷ்வால் தலைமையிலான தமிழ் தலைவாஸ் இதுவரை ஆடியுள்ள 6 போட்டிகளில் 3-ல் வெற்றி, 3-ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், விஜய் மாலிக் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் 9 போட்டிகளில் 4-ல் வெற்றி, 5-ல் தோல்வி என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.
நடப்பு தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தொடங்கிய தமிழ் தலைவாஸ் அந்த அணியை 38-35 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. அதற்கு தெலுங்கு டைட்டன்ஸ் பதிலடி கொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல, கடைசி 3 போட்டிகளில் சந்தித்த தொடர் தோல்விகளில் இருந்து மீண்டுள்ளது. கடைசி 2 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ், இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.