Advertisment

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் முதல் வெற்றி!

புரோ கபடி லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதவுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Thalaivas vs Telugu Titans PKL 11 match 3 Tamil News

புரோ கபடி லீக் 2024 - தெலுங்கு டைட்டன்ஸ் vs தமிழ் தலைவாஸ் மோதல்

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்தப் போட்டியில் 2-வது கட்ட ஆட்டங்கள் நொய்டாவிலும், 3-வது கட்ட ஆட்டங்கள் புனேயிலும் நடக்கிறது. 

Advertisment

இந்தத் தொடரில் புனேரி பல்தான், முன்னாள் சாம்பியன்கள் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி. யோத்தாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்றுள்ன. 

இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதியது. 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 44-29 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் நரேந்திரன், சச்சின் ஆகியோர் தலா 10 புள்ளிகளும், சஹில் 5 புள்ளிகளும், அபிஷேக் 4 புள்ளிகளும், சாஹர் 3 புள்ளகளும் எடுத்தனர். தெலுங்கு டைட்டன்ஸ் அணி தரப்பில், அதிகபட்சமாக பவன் 10 புள்ளிகள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

நேருக்கு நேர் 

புரோ கபடி லீக் வரலாற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணியும், 5 போட்டிகளில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதியுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்தது.

இவ்விரு அணிகள் கடைசியாக மோதிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 54-29 என்கிற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. 

கடந்த சீசன் புள்ளிப்பட்டியலில் 2 வெற்றிகள், 19 தோல்விகள் மற்றும் 1 டை உடன் தெலுங்கு டைட்டன்ஸ் 21 புள்ளிகளுடன் 12வது இடத்தைப் பிடித்தது. மறுபுறம், தமிழ் தலைவாஸ் கடந்த சீசனில் 9 ஆட்டங்களில் வெற்றி மற்றும் 13 தோல்வியுடன் 51 புள்ளிகளுடன் 9 வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment