Advertisment

Tamil Thalaivas vs Telugu Titans Pro Kabaddi Live Streaming: நேற்றைய தோல்விக்கு இன்று ஆறுதல் தருமா தமிழ் தலைவாஸ்?

Tamil Thalaivas vs Telugu Titans Pro Kabaddi Match Live Streaming: நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி தெலுகு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Thalaivas vs Telugu Titans Pro Kabaddi Season 6 Live Streaming

Tamil Thalaivas vs Telugu Titans Pro Kabaddi Season 6 Live Streaming

Tamil Thalaivas vs Telugu Titans Pro Kabaddi Live Streaming: புரோ கபடி தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Advertisment

புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் நேற்று முன்தினம் (அக்.7) சென்னையில் தொடங்கியது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் வீழ்த்தி இருந்தாலும், நேற்று நடந்த போட்டியில் யு.பி.யோத்தா அணியிடம் தமிழ் தலைவாஸ் தோற்றது.

ஒருக்கட்டத்தில் 4-19 என பெரும் லீடிங்கில் இருந்தது யு.பி.யோத்தா. அதன்பிறகு எழுச்சிப் பெற்ற தமிழ் தலைவாஸ், 28-19 என கடும் சவால் அளித்தது. இறுதியில், 32-37 என்று அருகில் வந்து தமிழ் தலைவாஸ் அணி தோற்றது.

முதல் போட்டியில் டேக்கில் என்பது மிரட்டலாக இருந்தது. ஆனால், நேற்றைய போட்டியில் வீரர்கள் இடையே நிலவிய புரிதலின்றி காரணமாக டேக்கிளில் சொதப்பியது தமிழ் தலைவாஸ். நேற்றைய தோல்விக்கு முக்கிய காரணம் இதுவேயாகும். அதேசமயம், ஆரம்பத்தில் சென்ற ரெய்டிலும் தமிழ் தலைவாஸ் கோட்டைவிட்டது.

இதனால், இறுதிக் கட்டத்தில் சிறப்பாக விளையாடியும், வெற்றியை வசப்படுத்தமுடியவில்லை. இது நிச்சயம் தமிழ் தலைவாஸுக்கு ஒரு சறுக்கல் தான்.

இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி தெலுகு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டியை Star Sports 2 and Star Sports 2 HD சேனலில் கண்டுகளிக்கலாம். இரவு 7.30 மணி முதல் லைவ் ஆரம்பமாகிவிடும். போட்டி எட்டு மணிக்கு தொடங்கும்.

ஆன்லைனில், ஹாட்ஸ்டார் சேனலில் இந்த போட்டியை நேரடியாக காணலாம்.

Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment