புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் நேற்று முன்தினம் (அக்.7) சென்னையில் தொடங்கியது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் வீழ்த்தி இருந்தாலும், நேற்று நடந்த போட்டியில் யு.பி.யோத்தா அணியிடம் தமிழ் தலைவாஸ் தோற்றது.
இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி தெலுகு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியின் லைவ் அப்டேட்ஸ்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் நீங்கள் உடனுக்குடன் காணலாம்.
Tamil Thalaivas vs Telugu Titans LIVE Kabaddi Score, Pro Kabaddi League 2018 Season 6 Kabaddi Match Live Updates: தமிழ் தலைவாஸ் – தெலுகு டைட்டன்ஸ் அணி போட்டி லைவ்:
10:22 PM: இறுதியில், 33-28 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் வெற்றிப் பெற்றுள்ளது.
10:00 PM: இரண்டாம் பாதி ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் இன்னும் வேகத்தை கூட்டவில்லை எனலாம். லீடிங்கில் தொடர்ந்து தெலுகு டைட்டன்ஸ் அணி உள்ளது.
09:45 PM: தமிழ் தலைவாஸ் ஆல் அவுட் ஆனது. நேற்றையப் போட்டியைப் போல இன்றைய போட்டியிலும் தமிழ் தலைவாஸ் முதல் பாதிக்கு முன்னதாகவே ஆல் அவுட் ஆகியுள்ளது. முதல் பாதியில் 11-17 என தமிழ் தலைவாஸ் பின் தங்கியுள்ளது. டேக்கிளில் செய்த சில முந்திரிக் கொட்டை தவறுகளே இந்த பின்னடைவுக்கு காரணம்.
09:40 PM: தெலுகு டைட்டன்ஸ் வீரர்கள் கொஞ்சம் சீன் போடுகிறார்களோ என்று தோன்றுகிறது. கேப்டன் அஜய் தாகூரை டேக்கில் செய்துவிட்டு, இறுதிப் போட்டியில் கப் ஜெயித்த ரேஞ்சுக்கு ஆட்டம்.
09:30 PM: இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதான்! அந்த அவசரம் தான்... தமிழ் தலைவாஸ் அணிக்கு கொஞ்சம் பின்னடைவாக உள்ளது. டேக்கிளில் வீரர்களுக்குள் கரெக்டான கம்யூனிகேஷன் வேண்டும். அது கொஞ்சம் மிஸ்ஸிங்.. பார்ப்போம்!
09:24 PM: நீயா - நானா ஆட்டத்தைப் பார்க்க, நீயா நானா கோபிநாத் அரங்கிற்கு வந்திருக்கிறார்.
09: 18 PM: தெலுகு டைட்டன்ஸ் வீரர்களும், தமிழ் தலைவாஸ் வீரர்களும் அரங்கிற்குள் வந்தனர். சும்மா சொல்லக்கூடாது சவுண்டு அள்ளுது நம்ம பிளேயர்ஸ் களம் இறங்கின போது.