இப்போதாவது ஜெயிக்கலாமே? மே...! யு மும்பாவுடன் மோதும் தமிழ் தலைவாஸ்!
கடந்த செப்.28ம் தேதி இதே அரங்கத்தில் நடந்த குஜராத் ஃபார்ச்யூன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 50-21 என்ற புள்ளிகள் கணக்கில் தலைவாஸ் பெண்டு நிமிர்க்கப்பட்டது
கடந்த செப்.28ம் தேதி இதே அரங்கத்தில் நடந்த குஜராத் ஃபார்ச்யூன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 50-21 என்ற புள்ளிகள் கணக்கில் தலைவாஸ் பெண்டு நிமிர்க்கப்பட்டது
Tamil thalaivas vs U Mumba live streaming pro kabaddi 2019
புரோ கபடி லீக் 2019 தொடரில், தமிழ் தலைவாஸ் அணி இன்று யு மும்பா அணியை எதிர்கொள்கிறது.
Advertisment
புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் இருக்கும் இடம் கடைசி. முதல் அணியாக நடப்பு தொடரை விட்டு வெளியேறியது.
19 போட்டிகளில் 13 தோல்விகள், 3 வெற்றி, 3 டிரா. மொத்த புள்ளிகள் 30.
Advertisment
Advertisements
இந்நிலையில், தாவ் தேவிலால் விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், யு மும்பா அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் களமிறங்குகிறது. கடந்த செப்.28ம் தேதி இதே அரங்கத்தில் நடந்த குஜராத் ஃபார்ச்யூன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 50-21 என்ற புள்ளிகள் கணக்கில் தலைவாஸ் பெண்டு நிமிர்க்கப்பட்டது.
ஸ்டார் போர்ட்ஸ் சேனலில் தமிழ் தலைவாஸ் - யு மும்பா போட்டியை லைவாக காணலாம். ஆன்லைனில், ஹாட் ஸ்டாரில் இப்போட்டியை காணலாம்.
முன்னதாக, தபாங் டெல்லி அணிக்கு எதிராக 60-40 என்ற தோல்விக்குப் பிறகு, புனேரி பால்டன் நடப்பு தொடரில் இருந்து வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.