11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
தமிழ் தலைவாஸ் vs யு மும்பா
இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் - யு மும்பா அணிகள் இடையே நொய்டா உள் விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை (நவ.14) நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி பெற்றது.
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் அணி 40-34 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - யு மும்பா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் யு மும்பா அணி 35-32 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நடப்பு சீசனை அதிரடியான வெற்றியுடன் தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 3ல் வெற்றி, 4ல் தோல்வி, ஒரு போட்டி டிரா என 21 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி கடைசியாக நடந்த 2 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்தது.
தபாங் டெல்லி அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 26- 39 என்கிற புள்ளிகள் கணக்கில் படுதோல்வி அடைந்து. புள்ளிகள் பட்டியலில் அந்த அணி தொடர்ந்து முன்னேற இன்றைய ஆட்டத்தில் வெற்றியை ருசிப்பது அவசியமாகும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
நேருக்கு நேர்
புரோ கபடி லீக் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் மற்றும் யு மும்பா அணிகள் 11 முறை மோதியுள்ளன. இதில் தமிழ் தலைவாஸ் 3 முறையும், யு மும்பா 7 முறையும் பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்தது.
கடந்த சீசனில் இந்த இரு அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 50-34 என்கிற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“