Tamil Thalaivas vs UP Yoddha Pro Kabaddi: புரோ கபடி லீக் தொடரின் 6-வது சீசனில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (அக்.8) நடக்கும் முதலாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் யுபி யோத்தா அணிகள் மோதுகின்றன.
தமிழ் தலைவாஸ் அணியைப் பொறுத்தவரை கேப்டன் அஜய் தாகூர், பர்தீப் நார்வால் அணிக்கு பெரிய பலம். கடந்த ஆட்டத்தில் 18 முறை ரெய்டு சென்ற அஜய், 14 புள்ளிகள் தட்டிச் சென்றார். பர்தீப் நார்வால் 11 புள்ளிகள் எடுத்தார்.
யுபி யோத்தா அணியை பொறுத்தவரை ரெய்டர்களான ரிஷன்க் தேவடிகா, பிரஷாந்த் குமார் ராய் ஆகியோர் அதிக விலை கொடுத்து இந்த சீசனில் வாங்கப்பட்டுள்ளனர். டாப் ரெய்டர்களான இவ்விருவரும், தமிழ் தலைவாஸுக்கு இன்று செம டஃப் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் தலைவாஸ் அணி: அஜய் தாகூர்(கேப்டன்), சுரிந்தர் சிங், ஜஸ்விர் சிங், மன்ஜீத் சில்லர், தர்ஷன், சி அருண், அமித் ஹூடா.
யுபி யோத்தா அணி: ரிஷன்க் தேவடிகா (கேப்டன்), பிரஷாந்த் குமார் ராய், ஸ்ரீகாந்த் ஜாதவ், ஜீவா குமார், நிதேஷ் குமார், சாகர் பி கிருஷ்ணா, சச்சின் குமார்.
Tamil Thalaivas vs UP Yoddha LIVE Kabaddi Score, Pro Kabaddi League 2018 Season 6 Kabaddi Match Live Updates: தமிழ் தலைவாஸ் – யுபி யோத்தா அணி போட்டி லைவ்:
இரவு 09:18 - பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது. இப்போட்டியை நேரில் காண 'பிக்பாஸ்' புகழ் நடிகர் மகத், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் அரங்கிற்கு வந்துள்ளனர்.
இரவு 09:21 - போன ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை, முதல் பாதியிலேயே இரண்டு முறை ஆல் அவுட் செய்திருந்தது தமிழ் தலைவாஸ். இதனால், யு.பி.யோத்தா அணி, அதில் மிக கவனமுடன் ஆடுகிறது. ஆனால், ஒன்று! ரசிகர்களின் சத்தம் விண்ணைப் பிளக்கிறது.
இரவு 09:26 - ஆனால், ஆட்டம் தொடங்கிய முதல் 10 நிமிடத்திலேயே தமிழ் தலைவாஸ் ஆல் அவுட் ஆனது. கேப்டன் அஜய் தாகூர் தொடங்கி அனைத்து ரெய்டர்களும் யு.பி. அணியின் அபாரமான டேக்கில்க்கு தப்பவில்லை. 10-0 என யு.பி.அணி முன்னிலையில் உள்ளது.
இரவு 09:39 - ரெய்டு, டேக்கில் என இரண்டிலும் தமிழ் தலைவாஸ் சொதப்பி வருகிறது. கேப்டன் அஜய் தாகூரே ரெய்டு சென்று சொந்த மண் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். இதனால் முதல் பாதி முடிவில் 4-18 என பெரும் லீடிங்கில் யுபி யோத்தா உள்ளது.
இரவு 09:50 - இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது. தமிழ் தலைவாஸ் அணியின் ரெய்டில் கோ-ஆர்டினேஷன் என்பது இந்த ஆட்டத்தில் சுத்தமாக இல்லை. கம்யூனிகேஷன் இல்லை. மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியை தவிர்ப்பதே இந்த ஆட்டத்தில் பெரிய விஷயமாகும்.
இரவு 10:00 - யு.பி.யோதா அணியை முதன் முறையாக ஆல் அவுட் செய்துள்ளது தமிழ் தலைவாஸ். வெல்டன் பாய்ஸ்!. 28-19 என தமிழ் தலைவாஸ் கொஞ்சம் முன்னேற்றம் காட்டி வருகிறது.
இரவு 10:10 - ஆட்டம் முடிய இன்னும் சில நிமிடங்களே மீதமுள்ளன. இதில், 33-23 என யு.பி.யோத்தா அணி முன்னிலையில் உள்ளது. இப்போது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் வேகமெடுத்தாலும், நேரம் குறைவாக உள்ளது. கேப்டன் தாகூர் தொடர்ந்து ரெய்டில் புள்ளிகளை குவித்து வருகிறார்.
இரவு 10:20 - வாவ்! வாட் எ மேட்ச் என்று சொல்லலாம். 35-31 என்ற நெருங்கி வந்துள்ளது தமிழ் தலைவாஸ்.
இரவு 10:26 - இறுதியில், 32-37 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோத்தா அணி வெற்றிப் பெற்றுள்ளது. 20 ரெய்டுகள் சென்ற தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாகுர் 12 ரெய்டு புள்ளிகளை அணிக்கு பெற்றுத் தந்துள்ளார்.